கொற்றியார்
எண்சீர் ஆசிரிய விருத்தம்
இரக்கம் இல்லா எழிலுடைக் கொற்றியீர்!
இதழ்சுவை ஏக்கம் இணைகனித் தாக்கம்
கரப்பிணை ஆக்கம் கண்தரு ஊக்கம்
காதல் கனிவுடன் காட்டீரோ?காலமும்
அரனரி அயனை அனுதினம் போற்றி,
அரியவன் தரிநாமம் அணிந்தது போதும்:
வரமளிக் கன்னியான் வளவூர் வந்தீர்!
வரமென வல்லுளம் வழங்கி வாழ்வீர்!
பொருள்
வைணவச் சின்னம் தரித்துத் திரியும் அழகுடைப் பெண்கள் கண்டு,காதல் 'மொழி பிதற்றும் கட்குடியன் கூற்று இது.
இரக்கம் இல்லாது,கடுமைப் பார்வை கொண்ட அழகிய கொற்றீரே!
உமது இதழ் சுவைக்காக ஏங்கியும்,கொங்கைக்கனியால் தாக்கப்
பட்டும்,உமது கரங்களால் அணைப்பு வேண்டியும்,நிற்க,உமது கண்களால்
ஊக்கம் கொண்டு,காதல் பார்வை சிந்துங்களேன்:காலமெல்லாம்
அரனை,அரியை,அயனை வணங்கியது போதுமே!திருமாலின்
திருமண்ணாம் நாமத்தை நெற்றியில் அணிந்தவரே!அணிந்தது போதுமே!
வரம்பல நல்கும் கன்னியாகுடி வந்து வலம் வரும் கொற்றியாரே!
உம்மை வணங்கிக் கேட்கிறோம்,உமது கடுமையான மனத்தை மாற்றி
எமக்குக் காதல் வரம் வழங்குவீர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக