ஞாயிறு, 22 மே, 2016

தலைவி இரங்கிக் கூறுவது

                  தலைவி இரங்கிக் கூறுவது

                     எண்  சீர் ஆசிரிய விருத்தம்

காதலாகிக்  கசிந்து,கண்ணீர் மல்கிக்
      கால்கண்ட கணக்கிலா அடியவர் காத்த
வேதநெறிச் சீலனே!வியன்கன்னித் தலைவ!
       வேட்கை கொண்டு விரகத் தாபத்தால்
மாதவர்  மேனிபோல் உடலுள்ளம் மருகி,
      மாமை நோயும் மாலை மதியமும்
போதவிழ் மாலையும் பொன்மாரி தூற்றிடப்
      போம்வழி அறியாப் பெண்மீது இரங்குவீர்.

                                   பொருள்
 கன்னியாகுடிக் கைலாச நாதன் மீது மையலுற்ற கன்னிப் பெண்ணொருத்தித் தன் மனக் காதலைக் கூறி இரங்குதல் .
     கைலாச நாதனே!உன்மீது பக்தி கொண்டு கசிந்து கண்ணீர் மல்கும் அடியவர்களுக்கு அருள் புரிந்து
காத்தவனே!நான்மறை நாயகனே!அழகுக் கன்னி நகர்க் காவலனே!உன் மீது காதல் கொண்டு,
விரக தாபத்தால் உடல் முனிவர் போல் சுருங்கியும்,உள்ளம் முனிவர்போல் உன்னையே நினைந்தும்,
பசலை நோயும்,நிலவும்,மாலைப் பொழுதும் ஒன்று சேர்ந்து வாட்ட,ஊரார் தூற்றப் போகும் வழி அறியாது தவிக்கும் பெண் மீது இரக்கம் காட்டுக.ஏற்று அருள்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக