புதன், 25 மே, 2016

கொச்சகக் கலிப்பா

                         கொச்சகக் கலிப்பா

தேடு   குயில்குரல் தென்றல் மயக்கத்தில்
நாடும் நலவேள் விடுக்கும் நனிமோகம்
வாடும் வளைக்கர வாட்டம் வளக்குடியான்
பீடும் பிழைப்பும் அளியான் குலச்சிலைக்கே.

                           பொருள்
தலைவி கொண்ட காதல் நிறைவேறாது போய்விடுமோ!அழிந்து படுவாலோ?என
எங்கும் செவிலியின் கூற்று.
       தனது இணைப் பறவை தேடிக் குயில் கூவும்,இளவேனில்,வீசும் தென்றல் காற்று,
இனிய மாலைப் பொழுதில்,மன்மதன் விடும் மலர்க்கணை அளிக்கும்,மோகச்சிந்தையால்
தவிக்கும் தலைவியின் வாட்டத்தை,அந்தக் கன்னியாகுடிக் கைலாசநாதன் அறியானோ?
நல்வாழ்வும்,உயிர்ப்பிச்சையும் வழங்கானோ?அவனையே அல்லும் பகலும் நினைத்தே
ஏங்கும் ஏக்கம் அறியானோ?நற்குலச் சிலைபோன்ற இப்பெண் துயர் தணியாதோ?
என ஏங்குகிறாள் செவிலி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக