கருணைக் கைலாச நாதன்
நேரிசைச் சிந்தியல் வெண்பா
மாலுக்குக் கண்ணளித்தான்;மாமதிக்கு வாழ்வளித்தான்;
பாலளித்துப் பண்பாடும் பேறளித்தான்-----ஆலமுண்டு
ஞாலமும் காத்தான் சிவன்.
பொருள்
ஆயிரம் மலர் கொண்டு சிவனை அருச்சித்த திருமால்,இறை திருவிளையாடலால் ஒரு பூ குறையத்
தன் கண்ணையே மலராய் அருச்சிக்க,மகிழ்ந்த சிவன் கண்ணும்,சக்கரப் படையும் நல்கினான்'
தக்கனால் சபிக்கப் பட்டு,அழகிழந்து,கலையிழந்து தவித்த சந்திரன் சிவனைப் பூஜித்த காலை,
அவன்மீது கருணை கொண்ட சிவன் அழகும்,களை வளர்வும் நல்கி,மூன்றாம் பிறையைத் தன்
சடையிலே சூடிக் கொண்டான்;சீகாழிக் குளக்கரையில் அழுதுகொண்டு நிற்கும் ஆளுடைய
பிள்ளை மீது கருணை கொண்டு,பார்வதி அம்மையிடம் பால் அளிக்கச்சொல்லிப் பண்பாடும்
அருளும் வழங்கி,நற்பேறு அளித்தான்.அமுதம் வேண்டிப் பாற்கடலை அசுரரும்,தேவரும் கடைந்த பொழுது,ஆங்குத் தோன்றிய ஆலகால விஷத்தை உண்டு,மூவேழ் உலகமும் காத்த கருணை கொண்ட
கைலாச நாதன் வீற்றிருக்கும் ஊர் கன்னியாகுடி ஆகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக