வியாழன், 12 மே, 2016

பிச்சியார்

                                 பிச்சியார்

                      தரவு கொச்சகக் கலிப்பா

மாற்றீரோ?மனவொடுக்கம் மகேசன்வழிப் பிச்சியாரே!
தேற்றீரோ?தினையளவு சுகம்காட்டி;திரள்பருவ
நாற்றத்தின் நலம்நீக்கிக் கறைக்கண்டன் கன்னியானின்
ஆற்றலுணர் அழகுடையீர்!அரும்பார்வை அருள்சிந்தும்.

   சிவபெருமான் மீது பற்று கொண்டு,அவர்போலவே வேடம் தரித்து அவரையே வணங்கும்
பெண்ணடியார்கள் பிச்சியார் எனப்படுவார்.அவர் மீது  மையலுற்ற ,கட்குடியன் புலம்புவது.
       மகேசன் போலவே ஆடையாபரணம் அணிந்துநிற்கும் பிச்சியாரே!உமது மன ஒடுக்கத்தை
மாற்றுங்களேன்!அழகு நலம் வாய்ந்த நீங்கள் சிறிதளவு மனம் மாறிச் சுகம் தாருங்கள்!திரண்ட
பருவ மேனியை,அதன் நறுஞ்சுவையை வெறுத்தொதுக்கி விட்டு,கன்னியாகுடி நீலகண்டனின்
ஆற்றலுக்கு அடிபணியும் அழகுடைய பிச்சியாரே!உமது கண்ணில் வசீகரப் பார்வை என்னும்
அருளை எம்மீது பொழியுங்கள் ,எனப் புலம்புகிறான். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக