வியாழன், 21 ஏப்ரல், 2016

எண்சீர் ஆசிரிய விருத்தம்

                                            எண்சீர் ஆசிரிய விருத்தம்

களித்தவர் கடந்தவர் கணக்கிலார் காலடியில்;
        கசிந்து கண்ணீர் மல்கியே கரைந்தவர்
விளித்தவர் சிவவினை விதைத்தவர் வியந்திடு
      விண்ணவர்,மண்ணவர் விழுந்தனர் காலடி:
துளிர்த்திடும் தூய்மை பக்திமேம் பாட்டோர்
        தொடர்ந்திடும் பூசனை ஏற்றிடும் காலடி:
தளிர்குளிர் தவழ்பொழில் கன்னியா குடிதனில்
      தரிசனம் அருளிடும் தத்துவன் காலடியே.

                                      பொருள்
கன்னியாகுடிக் கைலாசநாதனைக் கண்டு களித்தவர் அவன் காலடியில் காலமெல்லாம் கிடப்பர்:
உள்ளம் உருகி,கண்ணீர் சிந்தி வழிபடுவோர்,சி'வனே"என ஒலமிடுபவர் ,சிவப்பணிகளை உருவாக்கி
நற்செயல் வித்திட்டவர்,வியந்திடும் செயலாற்றும்,விண்ணவர்,மண்ணவர் எல்லோரும் விழுந்து
கிடக்கும் இடம் அவன் காலடி:மனத்தூய்மையோடு பக்தியுற்று,விடாது ஆற்றும் சிவபூஜையை
ஏற்றருளும் காலடி:தளிர்மையும்,குளிர்மையும் கொண்ட சோலைகள் நிறைந்த கன்னியாகுடியில்
அடியவர்களுக்குக் காட்சி அருளும் கைலாசநாதனின் திருப்பாதங்களே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக