கைக்கிளை
மருட்பா
காலன் உதைபட்டான்:கார்முகில் மன்மதனும்
சீலம் இழந்தான்:செருக்கொழிந்தான் ---மாலுமே.
ஆயினும் ஆசை அண்ணல் அன்பொடு
காய்மனம் தவிர்த்துக் காதல் தளிர்த்துத்
தேய்நிலாப் போன்றே ஏற்பான்
நோயினுள் விழுந்தேன்:நோக்கிலா நானே.
பொருள்
கூடாத,ஒருதலை அமைப்பாக அமைவது கைக்கிளை. கன்னியாகுடிக் கைலாசநாதர் மீது
காதல் கொண்ட ஒருத்தித் தன் ஆற்றாமை எண்ணி நொந்து கொள்கிறாள் .இயமனைக் காலால்
உதைத்தும்,மன்மதனைக் கண்பொறியால் உரு அழித்தும்,செருக்குற்ற நரசிங்கத்தை அழித்து,
மாலின் கர்வத்தை நீக்கியவன் தலைவனாம் கைலாசநாதன்.ஆனாலும் அவன்சீற்றம் அறிந்த
பின்னரும்,அவன் மீது மையல் கொண்டு,அன்பு காட்டுவான்,என ஏங்குகிறேன் நான்.அவனது
சம்ஹார வேட்கை குறைந்து காதல் மனம் துளிர்க்கும் என ஏங்குகிறேன்.காதலால் சிறப்பழிந்த
சந்திரனை,அழிநிலையிலும் மூன்றாம் பிறையாய்த் தன் தலையில் ஏற்றவனன்றோ சிவன்.
என்னையும் ஏற்பான் என்றே காதல் நோயுற்றேன்.ஒருதலையானது என் காதல் என்ற நோக்கம்
தவிர்த்து,இப்படிப் புலம்புகிறேன்,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக