கட்டளைக் கலித்துறை
காற்சுவடு தேர்ச்சிரிப்பு போர்த்தொடுப்பு பாரணைப்பு
தோற்கிழிப்பு கார்ப்பொடிப்பு வீறழிப்பு வேரழிப்பு
நீருடைப்பு நீளிருளை நீளடியுள் நீள்மிதிப்பு
சீருடைய அட்டவீரச் சீற்றமுடைக் கன்னியானே .
பொருள்
காலால் கூற்றுவனை அழித்த சுவடும்,தேரிலேறிப் படை தொடாமல் சிரிப்பால் முப்புரம்
அழித்த தன்மையும்,உலகைக் காப்பதற்காகவே ஒவ்வொரு முறையும் போர் தொடுக்கும்
பாங்கும்,தாருகாவனத்து முனிவர்களின் யானை விழுங்கிய வேகத்தில் அதன் தோலைக்
கிழித்துக் கொண்டு வெளியேறிய வெற்றியும்,கார்காலத்தில் கருமையான மன்மதன்
தவம் கெடுக்கும் நோக்கில் மலரம்பு தொடுத்த காலை நெற்றிக்கண் பொறியால் பொடியாக்கிய
தீரமும்,வீறுற்ற தக்கனை வீரபத்திரராய் அழித்த ஆக்கமும்,அரக்கர் கூட்டத்தின் வேர் வரை
அழித்த செயலும்,கர்வமுற்று சீறிப் பாய்ந்தவந்த தேவலோகக் கங்கையை அடக்கித் தனது
சடையுள் அடைத்த ஆற்றலும்,அந்தகாசுரனைத் தனது காலடியில் மிதித்துக் கிடத்திய பாங்கும்,
சீருடைய எட்டு வீரம் விளைவித்த நிலம்,எனவும்,அந்நிலைத்தமர்ந்த கன்னியாகுடிக் கைலாச
நாதக் கடவுள் எனவும் போற்றுவர் சான்றோர்.
(இப்பாடல் முதலடி பார்த்து இணைக்கவேண்டும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக