வெண்பா
ஊசலாடும் ஊதுகுழாய் நெஞ்சத்து வந்துற்றே
ஊசலழி உண்மையாம் சைவநெறிப் ----பாசத்துக்
கண்காட்டிக் காலடியால் தொட்டுணர்த்தும் கன்னியான்
தண்பாதம் போற்றுக நெஞ்சு.
பொருள்
எதையும் ஆய்ந்து இதுவே உயர்ந்தது,இதன்வழி செல்வோம்" என முடிவெடுக்க முடியாமல்
அலைபாயும் மனம்;நன்மை,தீமை என இருபக்கமும் சென்று சென்று முடிவில் வெம்பி அடுப்பூதும்
ஊது குழாய் போல,கருகி,வெம்மை தாளாது தடுமாறும் நெஞ்சத்தில் வந்தமர்ந்து,ஒரு பக்கம்,உயர் பக்கம்,அது சிவநெறியே ஆகும்"என உணர்த்திப் பசுவாகிய உயிருக்குப் பதியின் பாசத்தைக் கண்ணருளால் அருளிக் காலடியால் சிவதீக்கை அளித்து ஆட்கொள்ளும் கன்னியாகுடிக் கைலாச நாதன் நிழலாய்க்
கருணையாய்க் காட்சி தரும் பாத மலர்களைப் போற்றி வணங்குவாய் நெஞ்சே.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக