வியாழன், 14 ஏப்ரல், 2016

ஊசல்

                             ஊசல்
                     கலித்தாழிசை
காப்பணி நாப்பண்கழுத்தணி தேய்ப்பண்ணும்
மாப்பணிக் கன்னியான் மாப்பெருமை போலொலிக்க,
காய்நிலா சூழ்நில வாழ்மரக் காலூஞ்சல்
தேய்பிறைத் தேவதேவன் தீம்புகழ் பாடிப்பாடிப்
பொன்மேனிப்  பெண்ணணங்கீர்! ஆடுக!பொன்னூசல்.
பொன்பொருளான் பண்பாடி ஆடுகபொன்  னூசல்.

                             பொருள்
    காப்புபோல் கைகளில் அணிந்துள்ள வளையல் போன்ற அணிகள்,எழுப்பும் ஒலியும்,
கழுத்தில் அணிந்துள்ள அணிகள் உராய்வதால் ஏற்படும் ஒலிகளும்,பெரிய மலர் மாலைகளை
அணிந்துள்ள,கன்னியாகுடிக் கைலாசநாதரின் பெருமை பேசுவதுபோல் ஒலிக்கவும்,வெண்ணிலவு
சூழ்ந்த மரக்காடுகளில் வெட்டப்பட்ட பழமையான மரப்பலகைகளால் உருவாக்கப் பட்ட ஊஞ்சலை
மூன்றாம் பிறைச்சந்திரனைத்  தலையில் அணிந்துள்ள தேவ தேவனாகிய கன்னிக் கடவுளின்
புகழை  விரிவாகப் பாடியபடி ஆட்டுங்கள்:ஆடுங்கள்:பொன்போன்ற நல்லுடல் கொண்ட பெண்களே!
பொன்னையும் பொருளையும் வாரி வழங்கும் கைலாசநாதரின் புகழைப் பாடிக்கொண்டே
பொன்னூஞ்சல் ஆடுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக