திங்கள், 25 ஏப்ரல், 2016

தூது --தமிழ்

                               தூது --தமிழ்

            எண்சீர் ஆசிரிய விருத்தம்

அறிஞர் அகத்துறை அருமைத் தமிழே!
        அகமும் புறமும் ஆய்ந்திடும் தமிழே!
பொறியழி சுந்தரர்த் தூதாம் தமிழே!
       பொற்கிழி தருமி   பூரிப்புத் தமிழே!
நெறியால் உயர்ந்தநெகிழ்வால் கவர்ந்த
       நெற்றியால் கனன்ற ,நிறைமனக் கன்னியான்
செறிவில் மனத்தை இழந்த எனக்குச்
       செழிப்பை வழங்கும் செந்தழை வாங்கிவா
(இப்பாடல் இப்படியே இருக்கட்டும்.எண்ணிக்கை வேண்டாம் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக