திங்கள், 25 ஏப்ரல், 2016

நேரிசை வெண்பா

                           நேரிசை வெண்பா

பொன்னிபாக மேனியான் பொங்குகங்கை சூடினான்
கன்னிவாழ் மென்மையாள் காதலேக்கத் ---தன்மையால்
அன்னமதைத் தூதனுப்ப, அன்னமோ அன்னையிடம்
உன்னும்  வழியறியா  ளே .

                                பொருள்
 பார்வதியாம் கல்யாணி அம்மையைத் தன்னுடலில் சரிபாகம் கொண்டு விளங்கும்,
ஈசன் கங்கையையும் முடியில் சூடிக் கொண்டவன்:கன்னியாகுடியில் வாழும் மென்மையான
குணம் கொண்ட தலைவி,கைலாசநாதர் மீது,காதலுற்று,வாடி,முடிவில் ஓர் அன்னப்பறவையை
ஈசனிடம் தூது அனுப்புகிறாள்:அன்னப்பறவையோ ஈசன் அருகே இருந்த அம்மையின்
அழகும்,அவளின் ஊர்தியான தெய்வீக அன்னமும் மனதைக் கவர,அன்னையிடமே  தங்கிவிட்டது:
மாலையும் வரவில்லை:அன்னமும் வரவில்லை:ஆற்றும் செயல் அறியாது தவிக்கிறாள் தலைவி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக