சனி, 9 ஏப்ரல், 2016

கட்டளைக் கலித்துறை


                      கட்டளைக் கலித்துறை



   அளியானை,அண்ணா மலையானை,ஐந்தொழில் ஆற்றுவானை
   எளியானை,ஏந்திழை பாகத்தில்  ஏற்றானை  எண்குணத்துத்
   தெளிவானைத் தென்னவ மன்னனைத் தென்றல்சூழ் காவிரிபாய்
  பொலிவுடைக் கன்னியூர்க் கைலாச நாதனைப் போற்றுவமே.

                                                         பொருள்
   கருணை கொண்டவனை,பெரும் சோதியாய் நின்ற அண்ணாமலையானை,படைத்தல்,காத்தல்,
அழித்தல்,அருளல்                       என்னும் ஐந்தொழில் ஆற்றுபவனை,எளிமையாய் அடியவர்களுக்குக்
காட்சி கொடுப்பவனை,பார்வதி தேவியைத் தன்னுடலில் சரி பாதி அளித்தவனை,எட்டுக் குணங்களால்
நிறைந்தவனை,தென்னாடுடைய சிவனை,தென்றல் சூழ்ந்து,காவிரியாறு பாயும்,வளம் நிறைந்த கன்னியாகுடிக் கைலாசநாதனை போற்றி வணங்கி நலம் பெறுவோம்.
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக