கலிநிலைத்துறை
நெஞ்சே!நினையாய்:நிமலன் தருசுகம்;நண்ணினாரை
வஞ்சமாய் மாற்றியே வார்கழல் தீண்டி வளம்காட்டும்
செஞ்சடைக் கன்னியான் சேவடி பற்றிப் புலம்புகின்றாய்:
மஞ்ஞை மணாளன் மறவாது மாலை அளித்திடுவான்.
பொருள்
தலைவி தன் மனத்திற்குத் தானே கூறிக் கொள்வது போல் அமைந்தது இப்பாடல்.நெஞ்சமே!நீ
நினைத்துப்பார்,நிமலனாம் கன்னியாகுடிக் கைலாசநாதன் அளிக்கும் அன்பை;தன்னை நாடிவரும்
அடியவர்களை,அவர்குணத்தை,நல்வழிக்கு மாற்றிடத் தனது திருவடியால் தீக்கை
புரிந்து வளம் காட்டுபவன் அவன்:அவனது திருப்பாதங்களைப் பற்றியபின்னும் புலம்புகின்றாய்!
மலைமகளின் கணவன் உன்னை மறவான்:மாலை அளித்து உன்னை ஏற்பான்:ஏன் ?இந்தக் கவலை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக