ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

மகிழ்வானந்தம்

                                                   மகிழ்வானந்தம்


                                                 அறுசீர் ஆசிரிய விருத்தம்

போற்றியோ போகமருளும் புற்றீசன் பொற்கழல்கள்:
             போற்றாதோர் ஏற்றிடும்
ஆற்றலண்ணல் ஆன்ற அடிமுடி தேடியோர்
            ஆற்றலழி மாய்ந்தனர்:
கூற்றுவனும் கூர்மலரான் மன்மதனும் கோட்டைமூன்றும்
         காற்றாகிப்   போனாரே!
சேற்றிதழ்ச் செந்தாமரைச் செங்கன்னிக்  கைலாசன்
        சேர்ந்தால்  மகிழ்வுவரும்.

                                         பொருள்
  இன்பமும்,மகிழ்வும் நல்கும் பிறவாப் பெரியோனைப் போற்றினால் பொன்னும் பொருளும் போகமும் கிட்டும்:போற்றாதோர் கூட அவனால் அன்பு காட்டப் படுவர்:கர்வமுற்ற மாலும்,பிரமனும்,சோதிப்
பிழம்பாய்த் தோன்றிய அண்ணாமலையின் அடிமுடி தேடிச் சென்று ஆற்றலெல்லாம் இழந்தனரே
அன்றிக் காண இயலவில்லை:மார்க்கண்டேயனுக்காக இயமனை அழித்தார்:தவம் கலைக்க முனைந்த மன்மதனை நெற்றிக்கண்ணால் பொடியாக்கினார்:திரிபுரக் கோட்டை மூன்றையும் சிரிப்பினால்
அழித்தார்:செந்தாமரைக் காடாய் விளங்கும் கன்னியாகுடியின் கைலாசநாதர் ஆற்றிய ஆற்றலுக்கு
அவரே நிகர்:ஆதலின் அவரை வணங்கிப் போற்றினால் மகிழ்வும்,அமைதியும் நம்மை வந்தடையும்.  
           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக