தூது
நேரிசை வெண்பா
மகிழ்மயிலே! மன்மதன் தன்செயலில் மாறான் :
நெகிழ்வளை நீர்க்கண் தொடர ----முகில்நிலா
சுட்டெரிக்கும் என்காதல் சொல்லியே கன்னியான்
வட்டமாலை வாங்கிவா நீ.
பொருள்
பாட்டுடைத் தலைவன் மீது மையலுற்ற தலைவி,தன் மனத்தை மயில்,கிளி,மான்,
போன்ற வற்றைத் தூதாக அனுப்புதல் மரபு.அந்த முறையில் கன்னியாகுடிக் கைலாசநாதர் மீது
காதலுற்ற தலைவி,மயிலைத் தூதாக அனுப்புகிறாள்.மயிலே!மகிழ்வை நல்கும் மயிலே!மன்மதன்
என்மீது மலரம்பு பொழிந்து கொண்டே இருக்கிறான்:உனது பிரிவால் எனது கைவளையல்கள்
நெகிழ்ந்து விட்டன:உன்னை நினைந்து நினைந்து கண்ணீர் வழிந்தோடுகிறது:வானத்து
நிலவு வேறு என்னைச் சுட்டெரிக்கிறது:மயிலே!என்காதலை,அந்தக் கன்னியாகுடி வாழ்
கைலாச நாதனிடம் சொல்லி,அவன் நினைவாய் அவனணி மாலை வாங்கி வா"எனக்கூறி
மயிலைத் தூது அனுப்புகிறாள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக