மறம்
எண்சீர் ஆசிரியச்சந்த விருத்தம்
இதய மற்று,இளமை வேண்டி
இங்கு வந்த எளிய தூத!
உதய மான உந்தன் எண்ணம்
உயர்ந்த தல்ல:ஓடி ஒளிந்திடு:
இதய மெல்லாம் இறைவன் கன்னி
என்று வாழும் தலைவி வேண்டி
இதற்கு முன்னர் பதியில் புகுந்த
இலக்கம் வீரர் இளைத்துப் போன
எழுச்சி கேட்டுத் தொழுது மாறு :
எடுத்து வந்த இதழி தேடி,
அழுத கூட்டம் அரண்டு ஓட,
அடுத்த கூட்டம் எடுத்த வில்வேல்
விடுக்கும் முன்னே விடுத்த தமுயிர்:
விழுந்தோர் வில்வேல் விரியில் வேலி:
தொடுத்த போரில் தொலைந்த முடிகள்
தொலைவில் காட்டில் தொங்கிடும் பார்நீ.
பொருள்
கன்னியாகுடிக் கைலாசநாதர் மீது அன்புகொண்டு வாழும் பெண்ணை மணம் முடித்துத் தருமாறு
அரசன் தூது அனுப்ப,அத்தூதனிடம் குலப்பெருமை கூறி அவனை விரட்டுகின்ற மறவர் திறனே
மறம் ஆகும்.
இறைவன் மீது பற்று கொண்ட பெண்ணை விரும்பும் இதயமற்ற அரசனின் தூதனே!உம் மன்னனின்
எண்ணம் உய்ரந்ததல்ல:ஓடிப்போய்விடு.ஒளிந்துகொள்.இல்லெனில் நீஅழிவாய்.மனமெல்லாம் கன்னியாகுடிக் கைலாசநாதரே என வாழும் எங்கள் மறக்குலப் பெண்ணை மணம் முடித்துத்தா "எனக் கேட்டு வந்த பலமன்னர்களின் அழிவைபார்.அதன்பின் நீயே பேசாது ஓடிவிடுவாய்.
அந்த மன்னர்களின் தூதுவர்கள் கொணர்ந்த ஓலை தேடியே அலைந்தது ஒரு கூட்டம்;ஏனையோர்
எங்கள் மீது போர் தொடுக்க வில்லையும் வேலையும் தொட்டனர்;தொடும் முன்னரே அவர்கள் உயிர்
அவர்களை விட்டுப் பிரிந்தது;அப்படி விழுந்தோர் விற்களையும்,வேல்களையும் நாங்கள் எங்கள் வீட்டுத்
தோட்டத்தில் வேலியாக அமைத்துள்ளோம்;அப்போரிலே முடிகளை இழந்து,உயிர் தப்ப ஓடினர் பல
மன்னர்கள்;அவர்களது முடிகளை(கிரீடங்களை)நாங்கள் சுடுகாட்டில் காட்சிப் பொருளாகத் தொங்கவிட்டுள்ளோம் அதைப் பார்த்து விட்டுப் பிறகு தூது சொல்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக