செவ்வாய், 12 ஏப்ரல், 2016

கலிநிலைத்துறை

                                                      கலிநிலைத்துறை

பாரும் பனியும் கடலும் நிறைந்த மறையன்னான்
காரும் மதியும் புனலும் சடையணி முக்கண்ணன்
தேரும் திருவில் இருக்கச் சிரிப்பால் திரிபுரத்தை
ஊரும் உவப்ப அழித்த கனிநகர்   வெற்றியானே.

                                    பொருள்
   உலகும்,பனிமலைகளும்,கடலும் ஆகிய எங்கும் நிறைந்திருக்கும் நான்மறை போல்
விளங்குபவன்:மேகங்கள்,நிலவு,கங்கை ஆகியவற்றைச் சடையில் அணிந்து விளங்கும்
முக்கண்ணன்:நான்மறையாகியகுதிரைகள் பூட்டிய தேரில்,மேருமலையாகிய வில்லும்,
திருமாலாகிய  அம்பும் கொண்டு போருக்குக் கிளம்பியவன்,த்ன்சிரிப்பாலேயே
முப்புரங்களை உலகம் காக்க அழித்தவன்:அப்பரம்பொருள் வெற்றித் திருமகன்
கன்னியாகுடியில் கைலாசநாதன் என்னும் திருப்பெயர் கொண்டு காட்சி தருகிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக