நல்வழி காட்டுவான்
நேரிசை வெண்பா
அம்மானை அல்லலழி அந்தணனை அற்புதப்
பெம்மானைப் பெண்பாகம் கொண்டானைச் ----செம்புயல்
சூடினானைச் சுந்தரரின் தோழனைக் கன்னியானை
நாடுக நல்வழி நெஞ்சு.
பொருள்
அருள்வாய்ந்தவனை,துயர் களையும் அந்தணனை ,அடியவர்களுக்காக அற்புதங்கள் நிகழ்த்தும்
பெருமானை.பார்வதி அன்னைக்குத் தன்னுடலில் சரிபாகம் கொடுத்தவனை,கங்கையைத் தன்தலையில் சூடியவனை,சுந்தரரின் தோழனாகவே மாறி,அருள் புரிந்தவனை,கன்னியாகுடி என்னும் ஊரில்
கோயில் கொண்டுள்ள,கைலாசநாதனை நெஞ்சமே!நாடுக:அவனைப் போற்றுக:உனக்கு நன்மையையும் வளமும் அருளாய்க் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக