திங்கள், 4 ஏப்ரல், 2016

கட்டளைக் கலித்துறை

                         கட்டளைக் கலித்துறை
கற்றார் மனத்துறை காசில் குணத்தவன் தாள்பணிவீர்!
சுற்றம் சுகமெனக் காலம் கழித்தது போதுமுணர்.
நற்றாய் அருள்நலம் நாளும் வழங்கிடும் கன்னியானைப்
பற்றின் பதஞ்சலி போலப் பதமதும் காட்டிடுவான்.                               3

                                           பொருள்
  நான்மறை,பன்னிருதிருமுறை சைவாகமங்கள் கற்றுணர்ந்து பக்தி கொண்ட  சான்றோரின் மனத்தகத்தே வீற்றிருக்கும்,குற்றமற்ற குணக்குன்றாம் சிவபெருமான் பாதங்களைப் பணியுங்கள்;
உறவுமுறை,உல்லாசம் என வீணே காலம் கழித்தது போதும்.ஈன்றெடுத்த தாயைப்போல நம்மீது
அருளும்,இரக்கமும்,அன்பும் காட்டிடுவான் கன்னியாகுடியில் கோயில் கொண்டுள்ள,கைலாசநாதன்.
அவனது பாதாரவிந்தங்களைப் பற்றோடு பற்றினால்,பதஞ்சலி முனிவருக்கு அருளியது போன்ற
பதத்தை,இடத்தை நமக்கு வழங்குவான்.சிற்றம்பலத்தில் ஆடிக் காண்பித்த பதங்களைக் காட்டுவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக