திங்கள், 4 ஏப்ரல், 2016

நேரிசை வெண்பா

                                         நேரிசை வெண்பா

நெஞ்சமே! நீகலங்காய் ! நீலகண்டக்  கன்னியானைத்
தஞ்சமடை: தண்சேவடி போற்றிடு!----அஞ்செழுத்து
மந்திர  மானதிரு  நீறணி! மன்றாடி
புந்தியில் வைத்துப் புகல்.
                                             பொருள்
நெஞ்சமே!ஏன் ?இந்தக் கலக்கம்?தேவர்களைக் காத்திடவே பாற்கடலில் தோன்றிய நஞ்சை
உண்டவன் கன்னியாகுடிக் கைலாசநாதப் பெருமான்.அவனைப் போற்றி நீயே கத"எனக்
கால்களில்,விழுந்து வணங்கிப் போற்றிடு:"நமசிவாய"என்னும் ஐந்தெழுத்து மந்திரம் ஒது:
நெற்றியிலே திருநீறு பூசு:திருச்சிற்றம்பலக் கடவுளை மனத்தில் நிறுத்திப் போற்று:அவன்
உன் மனத்துயரைப் போக்கிடுவான்.
                                               விளக்கம்
நீலகண்டன் ....அமுதம் வேண்டித் தேவர்களும்,அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தனர்;
அச்சமயம் ஆலகால நஞ்சு ஆங்குத் தோன்றிட அஞ்சியபடி எல்லோரும் ஓடிட,எம்பெருமான்
அவ்விடத்தைத் தானே பருகி உலகைக் காத்தார்;இறைவியோ தனது கருணைக் கரத்தால்
இறைவன் கழுத்தைத் தொட்டு,நஞ்சு உடலில் பரவாதவாறு தடுத்தாள் ;நஞ்சும் கழுத்திலேயே
தங்கிற்று;கழுத்தும் நீல வண்ணத்தைப் பெற்றது;இறைவனும் நீல கண்டன் (கழுத்தன்)ஆனார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக