கலி விருத்தம்
கன்னல் வில்லான் கண்ணில் மாய,
மின்னல் திரிபுரம் மென்சிரிப் பிலழிய,
முன்னவன் மதியான் முகிழ்தலை இழக்கக்
கன்னிக் கடவுள் கையருள் காப்பே.
பொருள்
கரும்பு வில்லாளன் மன்மதன் மலர்க்கணை தவத்தில் இருந்த சிவன் மீது எய்ததால் நெற்றிக்கண்
தழலினால் சாம்பலானான்;மின்னல்சூழ் வானத்தே திரிந்து உலகுக்கு இடையூறு ஆற்றிய திரிபுரக்
கோட்டை அரக்கர்கள் சிரிப்பினால் மாய்ந்தனர்:மூவர்க்கும் மூத்த கடவுள் என மதியாமல்,
அலட்சிய நோக்குடன் வேள்வி புரிந்த தக்கனும் தலை இழந்தான்;தீயோரை அழித்து,உலகைக்
காக்கக் கன்னியாகுடிக்கைலாசநாதனின் அருள் பொழியும் கரம் அழித்தலும் புரிந்து காக்கும்.
விளக்கம்
கையருள் காப்பே " என்பதால் அழித்த அந்தக் கரமே,தவறுணர்ந்து போற்றினால் வாழ்வும் தரும்,
என்பதை விளக்குகிறது.மன்மதனுக்குப் பொன்னுடலும்,தக்கனுக்கு ஆட்டுத் தலையும் அளித்துக்
காத்தவர் என்பதை உன்னுக.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக