வியாழன், 14 ஏப்ரல், 2016

வஞ்சித்துறை

                                      வஞ்சித்துறை
         போற்றிடப் பொற்றாளம்:
         தூற்றிடத் தோழபதம்;
         மாற்றிடக் கூற்றுநோய்:
         ஊற்றருள் கன்னியான்.
                        பொருள்
  குழந்தையாய்க் கைத்தாளமிட்டுப் போற்றிப் பாடிய திருஞான சமபந்தருக்குப் பொற்றாளம்
அளித்தவன்:தடுத்தாட்கொள்ள ஆலால சுந்தரின் திருமணத்தைத் தடுத்த இறைவனாம் முதிய
அந்தணனைப் பித்தா!பேயா!என்றெல்லாம் தூற்றிய சுந்தரருக்குத் தோழன்"என்ற நட்பு பாராட்டியவன்:
சமண சமயத்தில் இருந்து தம்பியை மீட்டுத்தாருங்கள்"என்ற திலகவதியின் வேண்டுகோளுக்குச்
செவிசாய்த்து,கூற்று போல் படுத்தும் வயிற்று வலியைக் கொடுத்துத் திருநீற்றால் போக்கி
அப்பரடிகளாய் ஏற்றுக்கொண்டவன்:ஈரமாம் பேரருள் பொழியும் கன்னியாகுடிக் கைலாசநாதனே
ஆவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக