வியாழன், 7 ஏப்ரல், 2016

அம்மானை

                                                             அம்மானை
                                                           கலித்தாழிசை
கல்லாலம்  நால்வருடன் வீற்றிருக்கும் கன்னியான்
நல்லருள் நல்குவதில் நாதனாவான்  அம்மானை:
நல்லருள் நல்குவதில் நாதனானால் சொல்லடியும்
வில்லடியும் கல்லடியும் வாங்குவதேன் அம்மானை?
நல்லருள் நல்கிட நாதனாடல் அம்மானை.

                                        பொருள்
அம்மானை என்பது இரண்டு அல்லது மூன்று பெண்கள் கழங்கு (பந்துபோன்ற ஒன்று ) கொண்டு
ஆடுவது:தூக்கிப்போட்டுப் பிடிப்பது :ஆடும்பொழுது முதலாமவள் பாட்டுடைத் தலைவனின் பெருமை
கூற,இரண்டாமவள் அதில் ஒரு குறை கூற,மூன்றாமவள் அக்குறையை நீக்கும் காரணம் கூறி,
மீண்டும் புகழ்தல்.
       கல்லால மரத்தடியில் சனகாதி முனிவர்களுடன் அமர்ந்துள்ள,கன்னியாகுடிக் கைலாசநாதன்
அடியவர்களுக்கு அருள் வழங்குவதில் முதல்வனாக விளங்குகிறான் "அம்மானை  என ஆடுகிறாள்:
     இரண்டாமவளோ நல்லருள் வழங்கும் நாதனெனில் சுந்தரரால் பித்தா"என்ற சொல்லடியும்,
அருச்சுனனால் வில்லடியும்,சாக்கிய நாயனாரால் கல்லடியும் ஏன் பெற்றான்?என்ற வினா எழுப்பி
ஆடினாள் .
     மூன்றாமவள் விடை கூறுகிறாள் "அடியவருக்கு அருள் பொழியக்  கைலாசநாதன் நடத்தும்
விளையாட்டு  அது"  அம்மானை என ஆடுகிறாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக