துயர் களைவான்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
வழுத்தும் தேவாரம் வையக வாழ்வை வளமாய் ஆக்கும்:
புழுவாய்ப் பிறப்பினும் புண்ணியன் பொன்னடி போற்றிடும்
கழுவாய் விளக்கிக் கன்னியான் கழலடை வழிகூறும்"
விழுப்பொருள் உணர்ந்து வணங்கின் விரிதுயர் அகலுமே. 3
பொருள்
புழுவாய்ப் பிறந்தாலும் புண்ணியா உன் பொன்னடி என் மனத்தே தங்கிட அருள்வாய்::எனக்
கேட்கும் தேவாரத் திருவாசகப் பாடல்கள் உலக வாழ்வின் அவலங்களை நீக்கி வளத்திற்கு
வழிகாட்டும்.ஆற்றும் பிழைகளுக்குப் பரிகாரம் கூறி அமைதிப் படுத்தும்:ஆண்டவனாம்
கன்னியாகுடிக் கைலாசநாதன் அருள் பெற ,அவன் திருப்பாதங்கள் அடைய வழி காட்டும்:
அத்தகைய நால்வர் பாடல்களின் பொருள் உணர்ந்து,மனமெல்லாம் சிவமெனப் போற்றினால்
நமது துயர் அகலும்:துயர் களைந்து காப்பான் கன்னியான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக