இரங்கல்
எழு சீர் ஆசிரிய விருத்தம்
மலர்விரி மாச்சுடர் மறைத்திடு மேகமே!
மென்னுடல் கருமை உற்றுநீ மின்னுகிறாய்.
பலர்நனை புதுமழைக் கண்ணீரை வடிக்கிறாய்;
பதைபதை இடிஇடி பதைப்புடன் வெடிக்கிறாய் ;
தலைமகன் கன்னியான் தருசுகம் இன்றியே
தவித்திடும் என்னிலை தத்துநீ எடுத்தனையோ?
அலைமுகில் கருமையே!அடைந்திடு கன்னியே.
அவன்புகழ் எனைப்போல் அனுதினம் போற்றிடு,
பொருள்
தனது ஆற்றாமையை எண்ணி மற்றவற்றுடன் ஒப்பிட்டு, இரங்கிப் புலம்புதல் ,
பொழுதுகண்டு,இயற்கை கண்டு புலம்புதல் அகப்பொருள் மரபு,
கன்னியாகுடிக் கைலாசநாதர் மீது மையலுற்ற தலைவி,மேகம் கண்டு,அதுவும் தன்னைப்
போலவே விளங்குவதாக எண்ணி,அதனிடம் கூறுகிறாள்
தாமரை மலரை இதழ் விரிக்கச்செய்யும் ஆதவனை மறைத்து நிற்கும் கருமேகமே!
உனது மென்மையான உடல் வருத்தத்தால் கருமையுற்றதோ?முனகல்போல் இடிநடுவே
மின்னுகிறாய்!உலகோர் நனையும்படிக் கண்ணீரை மழையாய் வடிக்கிறாய்!உள்ளத்து
வேதனைகளை வெளிக்காட்ட இயலாமல் இடி இடித்துப் புலம்புகிறாய்!கன்னியாகுடிக் கைலாச நாதன்
மீது காதலுற்று,அவனது அணைப்பும்,அன்பும்,கிடைக்காத என்னைப் போலவே நீயும்
காணப் படுகிறாய்!உன் கவலைகள் துயரங்கள் தீர வேண்டுமெனில் மேகமே!நீ கன்னியாகுடி
செல்வாய்.அங்கு வீற்றுள்ள சிவனின் புகழை,என்னைப்போல் நாள் தோறும் போற்று.
நன்மைகள் நாடி வரும்.நானும் அதற்காகவே காத்திருக்கிறேன்,எனத் தலைவி மேகத்திடம்
தன் நிலையை எடுத்தியம்புகிறாள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக