ஊர்
அறுசீர் சந்த விருத்தம்
மகிழ்வாய் மழலை மொழிகேட் டுயர்விண்
மதிசூழ் விடையில்
சுகிவாழ் அமுதம் சுரந்தே அளித்த
சுரபூ தரனாம்
அகிலம் புகழும் அழகாள் அவளை
அணைந்த அரனாம்,
மகிபா லனவன் மறைபோல் அமர்ந்த
மலரூர் கன்னி.
பொருள்
குளக்கரையில் தந்தையைக் காணாது அழுத அழுகுரல் கேட்டு,வானத்தே விடைமேல் வந்த
இறைவன்,அக்குழந்தைக்குப் பாலூட்டுக, என்ற மொழிகேட்டு,முலைப்பால் அளித்ததும்,
அக்குழந்தை,ஞானக் குழந்தையாகி,'தோடுடைய''என்னும் பாடலால் போற்றித் தொழுத பொழுது,
மகிழ்வாய் அப்பண்ணை ஏற்ற தேவர்களின் தலைவனாம்,
உலகோர் போற்றிப் புகழும் அழகுடைய மலைமகளை,மணந்து,அணைத்தபடிப் பாதியுடல்
அளித்தவனுமான உலகைக் காப்பவன்,கைலாசநாதன் நான்மறைபோல் சொல்லும்,பொருளுமாய்
வீற்றிருக்கும் மலர்கள் சூழ்ந்த ஊர் கன்னியாகுடி ஆகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக