சிவமெனச்சொல்
நேரிசை வெண்பா
போற்றுபுகழ்க் கன்னியான் போற்றவழி தேடிடும்
ஆற்றா மனமே!அஞ்சற்க.-----கூற்றுவன்
சீற்றம் சிவனெனும் சிந்தனை பாலனுக்கு
மாற்றம் மனமதில் கொள்.
பொருள்
உலகமெல்லாம்,உயிர்களெல்லாம் போற்றிப்புகழும் கன்னியாகுடிக் கைலாசநாதனைப்போற்ற
வழி அறியாது,விழிக்கும் மனமே!அச்சம் தவிர்ப்பாய்.பதினாறாம் அகவையில் தன்னை நோக்கி
வரும் கூற்றுவனின் சீற்றப் பார்வையைக் கண்டு,அஞ்சாது,"சிவாயநம" என்னும் ஐந்தெழுத்தை
மனம்,மொழி,வாக்கால் உச்சரித்தபடிச் சிவஸ்ரூபத்தை அணைத்துக் கொண்ட மார்க்கண்டேயன்
பெற்ற மாற்றத்தை,மாற்றிய ஐந்தெழுத்து மந்திரத்தை மனதில் கொள்வாய்.மகேசன் அருள்வான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக