சித்து
அறுசீர் ஆசிரிய விருத்தம்
நானெனும் மமதை நான்முகன் ஒருதலை
நகத்தால் கிள்ளிய
மானினேர் விழியாள் மனங்கவர் மணாளன்
மாணடி போற்றும்
வீணவா தவிர்க்கும் வியனடி யார்நாம்.
விரும்பின் மாற்றுவோம்:
காண்தகு காட்சிக் கருமேகம் பொன்னிழை
மின்னிட வைத்திடுவோம்.
பொருள்
சித்தர்கள் ஆற்றும் சித்து வேலை மகத்தானது:கல் யானைக்குக் கரும்பு தின்ன வைத்த
மதுரைச் சொக்கனின் சித்தர் கோலம் போற்றத்தக்கது.அதுபோல் ஆற்ற இயலாத நாம்
சொல் ஆக்கத்தில் சித்து புரிவோம்.
கர்வமுற்ற நான்முகனின் ஐந்து தலைகளில் ஒன்றை,நகத்தால் கிள்ளி "இறைவன் நிகர் நான்"
என்ற கர்வத்தைப் போக்கியவரும்,பார்வதி அம்மையின் கணவருமாகிய கைலாசநாதரின் கால்களைப்போற்றி வாழும் ,அடியவர் நாங்கள்.வீணாசைகள் தவிர்க்கும் நாங்கள் பிறரின் நன்மை
விரும்பி,வேண்டியாங்கு மாற்றம் செய்வோம்.வானத்தே தோன்றும் கருமேகக் கூட்டங்களில்
பொன் இழைகள் தோற்றுவித்து,உலகோருக்காக மின்னிடும் பொன்மாரி வழங்குவோம்.
அறுசீர் ஆசிரிய விருத்தம்
வைத்தியக் கன்னியான் வளமிகு அருளினால்
வில்லிலே வண்ணமும்,
கைத்தடி முதியவர் வளைந்திட வைப்போம்:
கண்மேல் ஒளிர்வோம்:
முத்துத் திங்களைச் செவ்வாய் அருகமைத்துப்
பொன்புதன் சேர்ப்போம்:
வித்தாம் வெள்ளியை இரும்பாய் விளிப்போம்:
வித்தகச் சித்தறி.
பொருள்
வைத்திய நாதனாய் விளங்கும் கன்னியாகுடிக் கைலாசநாதனின் அருளினால்
வானவில்லிலே வண்ணங்களைச் சேர்த்தோம்:கம்பூன்றிய முதியவர்களின் முதுகை வளைந்திட
அமைப்போம் ;அவர்தம் கண்மேல் கண்ணாடியாய் ஒளிர்வோம்:முத்து போன்ற திங்கள் முகத்தில்
செவ்வாய் அமைத்துப் பொன்னும் அணியும் கழுத்தில் அணிந்திட வைப்போம்.(திங்கள் கிழமை அருகே,
செவ்வாயும்,அதனருகே புதனும் வருவது கண்கூடு) செல்வ வளம் மிக்க (சுக்கிரன்)வெள்ளியை இரும்பாய் அடுத்து அழைப்போம் .வெள்ளியின் மறுநாள் சனி,(ச னி =இரும்பு)இவை யாவும் நாங்கள் ஆற்றும் சித்து என்பதை அறிவீர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக