வெளி விருத்தம்
காக்கும் கன்னிக் கடவுள் காலடி போற்றுமின்
போக்கும் வரவும் இல்லாப் புண்ணியன் போற்றுமின்
பூக்கும் கொன்றைப் புதுநிலாச் சடையன் போற்றுமின்
தேக்கமழ் அகப்பொருள் தீந்தமிழ் இயற்றியோன் போற்றுமின்.
பொருள்
உலகைக் காத்திடவே கன்னியாகுடியில் அருள் பாலிக்கும் கடவுளாகிய கைலாச நாதன்
திருவடியைப் போற்றுங்கள்.செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள் போலல்லாது,இறப்பும்,
பிறப்பும் இல்லாது,தன தோன்றியாய் விளங்கும் புண்ணியனைப் போற்றுங்கள்.
கொன்றை மலரையும்,பிறைநிலவையும் சூடித் திகழும் சடைஉடையவனைப்
போற்றுங்கள்.தேன்போல் இனிக்கும் அகப்பொருள் கருத்தமைந்த "இறையனார் களவியல்"
என்னும் நூலை இயற்றிய இறைவனைப் போற்றிப் பணியுங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக