வியாழன், 28 ஏப்ரல், 2016

காத்திடும் காவலன்

                       காத்திடும் காவலன் 
       
                        நேரிசை வெண்பா

இறைவன் மறையான் சிறையில் உறைவான்.
 துறையன் நிறையன் குறையான் -----பொறையன்
 பிறையன் முறையன் நறையன் வரையன்
 கறைக்கண்டன் கன்னியின்  கா.

                                பொருள்
 இறைவன்;மறைகளின் தலைவன்;அடியவர்களின் மனச்சிறையில் தங்குபவன்;அகம்,புறம் என்னும்
துறைகளின் எடுத்துக்காட்டாய் விளங்குபவன்;நிறைவு என்பதின் சான்றாளன்;பிறப்பு,இறப்பு இல்லாதவன்;பொறுமையின் பூரிக்கும் முனிவன்;பிறை நிலவை அணிந்தவன்;நீதி,நேர்மை கொண்டவன்;தேன்போல் இனிப்பவன்(தேன்சொரியும் கொன்றை மலரணிந்த சடையன்)
கயிலை மலையாளன்;நஞ்சினைப் பருகியதால்,கருப்பு நிறம் கொண்ட கழுத்தினை உடையவன்;
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த கைலாச நாதன் கன்னியாகுடியைக் காத்திடும் காவலன் ஆவான்.
      இப்பாடல் முழுவதும் வல்லின எதுகைகள் வந்துள்ளமை காண்க,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக