எண்சீர் ஆசிரியச் சந்தத் தாழிசை
மின்போலும் மெல்லிடையாய்!மன்றலுற்ற உன்காதல்
மன்னவனின் பண்புநலன் நண்ணுசெயல் நீஅறிவாய்!
கன்னலெனக் காரிகை கைதொட்ட காலத்தே
கருமேகக் கங்கை மறைத்தவன் செஞ்சடையில்:
புன்னைமர நீழலிலே வண்ணவெழில் மாலவனின்
பெண்ணழகில் மையலுற்றான் புன்முனிச் சாலையிலே.
நன்னமுத மோகினியை நாடியதும் நாடறியும்.
நற்காதல் கொள்ளாது கொள்வாய் சிவமே.
பொருள்
மின்னல்போல் மெல்லிடை கொண்ட தலைவியே!கன்னிக் கைலாசநாதன் மீது மையலுற்றுக்
காதல் கொண்டவளே!உன் தலைவனின் பண்பு நலனைக் கூறுகிறேன்,கேட்டு,அதன்பின் காதல்
கொள்வாய்.மலைமகளை,மணம் புரிந்து கொண்ட தருணத்திலும்,அந்தக் கைலாச நாதன்
தலையிலே செஞ்சடையிலே மறைந்து ஒளிந்திருந்தவள் கங்கை ஆவ ஆவாள்.
தாருகாவனத்துத் தீய செயலாற்றும் முனிவர்களை மாற்றச் சென்றகாலை,ஆணழகராய் (பிக்ஷாண்டவர்) சிவனும்,பெண்ணழகியாய் (மோகினி)திருமாலும் சென்றனர்;அங்கு அவ்வழகி
மீது மோகம் கொண்டவர் உன் தலைவர்.அது மட்டுமா!பாற்கடல் அமுதம் வழங்க வந்த
திருமாலாம் மோகினி மீதும் மையலுற்றவர் என்பதையும் மனதில் கொண்டு,காதலைத் தவிர்த்து விடு.
மனத்தை ஒருமைப்படுத்திச் சிவத்தை நிறுத்திச் சிவ பதம் அடைவாய்!எனப் பாங்கி உரைக்கிறாள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக