கலிவிருத்தம்
சித்தரான கூடலார் தத்துவமாம் காட்சியே:
சித்தரான தக்ஷிணார் முக்தியளி மூலவர்:
சித்தரான சிற்சபேசர் சக்திபுகழ் ஆடலார்:
சித்தரான கன்னியார் நித்தியமாம் மூர்த்தியே.
பொருள்
மதுரையில் வீற்றிருக்கும் சுந்தரேசர் சித்தராகிக் கல்யானைக்குக் கரும்பு
கொடுத்தும்,பல்வேறு சித்து மேம்பாடுகளைத் தத்துவமாய் வழங்கிக் காட்சி
அளிப்பார்:சின் முத்திரை தாங்கி ஆலால மரத்தடி அமர்ந்திருக்கும் தட்சிணா
மூர்த்தியார் உலக ஆன்மாக்களுக்கு முக்தி வழி காட்டும் உபதேச மூர்த்தி ஆவார்:
சிற்றம்பலத்தில் சித்தபுருஷராய்,நடனமாடும் நடராசப் பெருமான் சிவகாமி அம்மையால்
போற்றப்பட்ட ஆடலரசர் ஆவார்:கன்னியாகுடிக் கைலாசநாதராம் சித்தரோ,ஐந்தொழில்
ஆற்றும் அழிவில்லா ஆண்டவன் ஆவார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக