ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

மடக்கு

                   மடக்கு

எண்சீர் ஆசிரிய விருத்தம்

நாளது காணாரும் நாலது மேவாரும்
    நரைதிரை அடையாரும் நறைதிரைச் சடையாரும்,
கோள்நவ குணத்தாரும்,கோள்சிவ குணத்தாரும்,
    கோபுரம் உடையாரும் கோபுரம் அழித்தாரும்,
தோள்சுமை மகனாரும் தோல்கஜ உரித்தாரும்
      தோய்கனல் காட்டாரும் தோய் தமிழ்ப் பாட்டாரும்
கேள்வி விடையாரும் கேள்வி விடையாரும்
        கேதார நாதரே!கேதார நாதராவார்.

                                    பொருள்
    வந்த சொல்.மீண்டும் அதே ஒலியில் வந்து வேறு வேறு பொருள் தருவது "மடக்கு"ஆகும்.
      நாள்,எல்லாம் தேடினாலும்,நாள் நக்ஷத்திரங்கள் தேடினாலும் காண முடியாத தூரத்தில்
இருப்பவன்:நான்குவேதங்களாலும் போற்றப் படுபவன்:
     மூப்பும்,முதுமைச்சுவடும் அடையாதவன்:தேன் பொருந்திய கொன்றைமலரணிந்த சடையை உடையவன்: தாருகாவனத்து முனிவர்களின் வேள்வியிலிருந்து தோன்றிய யானை,தன்னை
விழுங்கிய காலை அதன் உடலைக் கிழித்துக் கொண்டு வெளிவந்து வெற்றி நடனம் ஆடியவன்:
     நவகோள்களின் நாயகன்:சைவக் கொள்கை கொண்டவன்:
         கோபுரங்கள் கொண்ட கோயில்களைக் கொண்டவன்:முப்புரங்களை அழித்தவன்:கோ-கோட்டை
 பிரணவப் பொருள் அறியத் தன்மகனாம் முருகனைச் சுமந்த தோளை உடையவன்::
     நெருப்பு எரிந்து கொண்டே இருக்கும் சுடுகாட்டில் வசிப்பவன்:இயல்,இசை நாடகம் தோய்ந்த
தேவாரத்திருவாசகத் தமிழால் போற்றப் படுபவன்:
      சனக,சனந்தன,சனாதன,சனத்குமாரர்களான நான்கு சீடர்களின் கேள்விக்கு விடை அருளும்
ஆலால மரத்தினன்;எல்லாக் கேள்விகளுக்கும் விடையாகக் காட்சி தருபவன்:
      கேள்விப் பொருளாம் நான்கு மறைகளாகிய எருது வாகனன்: விடை==காளை
கேதாரத்தில் வீற்றிருக்கும் நாதரவர்:கேது --பாம்பினை ஆர =மாலையாகக் கொண்ட வர்
கன்னியாகுடிக் கைலாசநாதர் ஆவார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக