சேவடி போற்று
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
குவித்த செந்நெல் குலையெலாம் கனிகள்,
குளிர்ந்த நீர்நிலை
புவியின் புண்ணிய பூமியாம் கன்னிப்
புகழ்குடிப் பரமன்
தவித்தோர் காக்கும் தண்ணழல் தாங்கி:
தளிரிள மலைமகள்
செவியினில் குருவருள் புகட்டிய திருவருள்
சேவடி போற்றிடு .
பொருள்
களத்துமேட்டிலே குவியல் குவியலாய்க் குவித்து வைத்திருக்கும் நெல் குவியல்:
வாழை,தென்னை,பாக்கு மரங்களில் தொங்கும் குலைகுலையாம் கனிகள்,ஆறும்,குளமும்
நிறைந்த நீர் நிலை,மருதநிலப் பெருமை கொண்ட புண்ணிய பூமியாய்விளங்கும்
கன்னியாகுடியில் வீற்றிருக்கும் புகழுடைக் கைலாசநாதக் கடவுள்:துயருற்றோரைக் காக்கத்
தண்ணருளும்,தீயோரை அழிக்கத் தழலும் தாங்கி நிற்பவன்:இளமை நிறைந்த பார்வதி தேவியாருக்கு
நான்மறைகளையும்,ஆகமங்களையும் குருவாய் மறையாய் (இரகசியமாய்)செவியினில்
உபதேசித்தவன்:அந்தக் கடவுளின் அருள்பொழியும் திருவடிகளைப் போற்றி வணங்குவாய்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக