ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

கலம்பகம்

                                       கன்னியாகுடிக் கலம்பகம்

                                                    காப்பு
                                          நேரிசை வெண்பா
உலக   முதன்மை உயிர்களின் காப்பு,
தலத்தமர் தந்தி!நவிலும் -----கலைகளின்
மேலவ!கன்னிக் கலம்பகம் மேன்மையுறக்
காலடி போற்றினேன் கா.                                          1

                                           பொருள்
  உலகத்தோரால் எல்லாவற்றிற்கும் முதன்மை பெற்றவன் எனப்போற்றப்படுபவனே!அனைத்து உயிர்களையும் காப்பவனே! எல்லாக் கோயில்களிலும் அமர்ந்திருக்கும் யானைமுகா! நவிலும்
கலையாம் நான்மறைகளின் நாயகனே!"கன்னியாகுடிக் கலம்பகம் "என்னும் கைலாச நாதரின்
பெருமை பேசும் இந்நூல் மேன்மை பெற வேண்டி,உன்னைப் பணிந்து போற்றுகின்றேன்.காத்திடுவாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக