அரஅர சிவசிவ சரவண பவவெனும்
அருமறைத் திருநடைக் குருபர!
அரையினில் அணிகலன் அழகுடன் அணிபவ!
அனையவள் அணைந்திடு அமலனே!
மறமற பிறமதம் மறுமறு அதன்மதம்
மணமதில் சுரமகள் புனைந்தவ!
திறதிற மனமதை ;திரண்டிடும் தருமமே;
தினைப்புனக் குறமகள் நினைபவ!
இருஇரு அமைதியாய்;இடரெலாம் பறந்திடும்;
இருமலர் இருதயம் உறைபவ!
இடுஇடு கரங்களில் ;இளைத்தவர் உயர்வரே ;
இமையவர் புரந்திடு இனியவேல்;
தரு தரு அருளுடைப் பெருநகர்க் குழவியே!
தக தக சிறுதேர் உருட்டிடு.
சிறு சிறு செயலதும் பெருந்திரு நகர்க்குக !
சிறுரதம் மகிழ்வுடன் உருட்டிடு.
பொருள்
ஹர ஹர ''சிவசிவ' சரவணபவ'என்னும் தாரக மந்திரங்களின் அடிப்படையில் ஐந்தொழில்
நடத்தும் சுவாமி நாதா!இடுப்பில்,காலில்,கைகளில்,தோளில் அழகிய அணிகலன்கள் அணிந்து
அழகுறக் காட்சி தரும் அழகா!அன்னை பார்வதி தேவி அணைத்து மகிழும் அழகுடைக் குழந்தையே !
பிற மதக் கருத்துக்களை மறந்தும்,தேவையானால் மறுத்தும் செயல் படுக அடியவர்கள்.
இந்திரன் மகளாம் தேவயானையை மணம் புனைந்தவனே!மனதைத் திறக்கவும்;தர்மம்
திரண்டு வரும்;தினைப்புன வள்ளியை எப்பொழுதும் நினைப்பவனே!
அமைதியாய் இருந்தால் துன்பம் பறந்தோடும்;இருமலர்களாம் வள்ளி ,தேவயானை நெஞ்சத்தில்
உறைபவனே! வேண்டும் கைகளில் வேண்டுவன வழங்கு;அதனால் துயருற்றோர் துயர் நீங்கும்;
இமையவரைக் காத்தது முருகனின் இனிய வேலன்றோ !
எங்கும்,எப்பொழுதும் யாவர்க்கும் இல்லை என்னாது வழங்கும் குணம் கொண்ட பெருமக்கள்
வாழும் கன்னியாகுடிக் குழந்தையே!சிறு தேர் உருட்டி அருள்வாய்.
சிறிய நற்செயல் கூடப் பெரிய செல்வமாகும்''என்ற கன்னியாகுடி மக்களின் எண்ணத்தில் உயர்ந்த
குகனே!சிறு தேர் உருட்டி அரு;வாய்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக