கற்றுற்ற மற்போரால் கடக்களிறு கதறிவிழக்
கண்ணுற்ற காரரக்கன் கதைதொட்டு
எற்றுற்றாய் எதிரில்வா என்றுரைவாய் தொடங்குமுன்
எமலோகம் எட்டிவிட்ட போர்க்களம்
விற்றுளைத்த வெற்றுடலைப் பற்றுற்றுப் பசிதீர்க்க
விரைவெடுக்கும் வியன்பேய் வெறித்துநிற்க
கற்றூணை ஒத்தவுடல் பொற்றுகளாய்ப் பொடித்துவிழக்
குறும்பேய்க் கொண்டாட்டக் கொலைப்போர்க்களம்
குற்றுயிராய்க் குறையுடலாய் இரைகண்டு கூளிப்பேய்
கூத்தாடிப் பந்தாடும் அரக்கர் களம் .
மற்றரக்கர் மாய்ந்துபோக,மாச்சூரன் மறைந்துபோக
மணித்தேரில் களம்வலம்வரு மழலையே!
நற்றவனாம் நீலகண்ட நலப்பதி குலக்கொழுந்தே!
நற்சிறுதேர் நகர்த்துக நன்கே.
சிற்றம்பலச் சிவகாமி சிந்தனைச் செல்வா!
சிறுதேர் உருட்டி அருள்வாய்.
பொருள்
மற்போரில் சிறந்த பூதப் படைத்தலைவனால் அடிக்கப்பட்ட மதயானை கதறியபடி விழ,
அதுகண்ட அரக்கன் கதாயுதம் தாங்கி, யானையை வீழ்த்தியவனே!என்னோடு போர் புரிய ''வா''
என்ற சொல் முடியும் முன்னரே அவ்வரக்கன் யம உலகு சென்றுவிட்டான்;
பூதப்படையின் அம்பு துளைத்து,உயிரிழந்த உடல் மீது ஆசைகொண்டு,தனது பசியைப்
போக்கிக் கொள்ள நினைத்த ஒருபேய் வெறித்தபடி நிற்கும்;கற்றூண் போன்ற உடலைக்
கொண்ட அரக்கன் போரில் அடிபட்டுப் பொடிப்பொடியாகி விழ,அவ்வுடலைக் கண்டு ஒரு
குள்ளப் பேய் மகிழ்ச்சியோடு துள்ளும் போர்க்களம்.
போரிலே அடிபட்டுப் பாதி உயிர் போன நிலையிலும்,குறை யுடலைக் கண்ட பொழுதும்
அவைகள் தனது உணவு என்பதால் ஒரு வயதான கிழப் பேய் அவ்வுடல்களைப் பந்து போல்
ஆடி ஆடி மகிழும் அரக்கர் களம்.எல்லா அரக்கர்களும் மாய்ந்துபோக,ஆணவச் சூரனோ
ஒடி ஒளிந்துகொள்ள,அக்களத்தை வளம் வந்த மனித்தேர்க் குமரா!
நற்றவன் நீலகண்டன் வாழ்கின்ற கன்னியாகுடியின் குலம் வளர் கொழுந்தே!
நலம்வாய்ந்த இச்சிறு தேரை நகர்த்துவாய்.
சிவகாமி உடனுறை சிற்றம்பலநாதன் சிந்தனையின் ஊற்றான செல்வா!சிறுதேர் உருட்டி அருள்வாய்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக