நெய்யதில் விழுந்திட்ட நீள்எறும்பு நைந்தும்,
நெய்யதில் உழன்று நீந்துமாப்போல்
மெய்யதை உன்வசம் ஒப்புவித்த மெய்யன்பர்
மெய்யுணர் ஞானம் அடைவர்;
கையதும் காலதும் கணக்கழி காலத்தில்
கைப்பொருளாய்க் கணப்பொழுதில் கைகொடுத்துப்
பொய்யழுக்கு போக்கிப் புண்ணிய வைப்புவைத்துப்
பொன்வீட்டின் புகுவழி புகல்பவனே!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தே உயர்ந்தானும்
வசையேற்று வாழ்விழந்து தாழ்ந்தானும்
ஐயமில்லா ஆறெழுத்தும் ஐயந்திரிபற அகம்கொள்ளின்
ஐந்தெழுத்தான் ஆசான்நீ காத்திடுவாய்.
செய்யநிலச் சீர்வளநெல் சிவனூர்ச் செல்வா!
சிறுதேர் உருட்டி அருள்வாய்.
செய்யும்பணி சைவம்தழை உய்யுமூர்ச் செல்வா!
சிறுதேர் உருட்டி அருள்க.
பொருள்
நெய்யிலே விழுந்த சிற்றெறும்பு அதனுள்ளேயே சுற்றிச்சுற்றி வந்து,நைந்து,நீந்தி,நெய்யோடு நெய்யாய்
ஒன்றிவிடும்;அதுபோல் உடல்,பொருள் ஆவி எல்லாவற்றையும் உனக்கே அர்ப்பணித்தவர்கள்
உன்னோடு ஒன்றி,உயர் ஞானம் அடைவர்.
கை,கால் விளங்காமல்,முதுமை வந்து துன்புறுத்தும் பொழுது கைப்பொருளாய் உன்னைக் கொண்டவர்கள் கலக்கம் நீங்கி,உன்னருள் பெற்று,புண்ணிய ஒளி வழிகாட்ட மோக்ஷம் என்னும்
வீட்டிற்குச் செல்லும் வழி அறிவர்;அவ்வழி காட்டும் வள்ளல் நீயே ஆவாய்.
நிலைத்த புகழோடு வாழ்ந்தவனும்,இகழோடு தாழ்ந்தவனும் மனத்தில் தெளிவுடன்
சரவணபவ''என்னும் ஆறெழுத்தை மனத்தகத்தே கொள்வானாயின் தந்தைக்கே ஞானம் வழங்கிய
ஆசானான நீ காத்தருள்வாய்.
நன்செய் நிலங்களிலே வளமாகிய நெல் விளையும் கைலாச நாதர் ஊரான கன்னியாகுடிச் செல்வா!
சிறுதேர் உருட்டி அருள்வாய்.
சைவம் தழைக்கும் பணியைச் செய்து உய்நிலை அடைந்தோர் ஊராம் கன்னியாகுடிச் செல்வா!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக