கண்விழிக் கருங்குவளை பொன்வண்டு சுற்றலின்
காதல்வழி மகரந்தம் செய்தியாகி
முன்விழித்த முளரியும் முகிழ்மனத்தில் ஆதவனை
மோகிக்கும் முழுச்செய்தி மடலாகி
நன்றலர்ந்த ஆம்பல் நாயகன் காணாது
நடுநிசி காத்திருந்ததும் கதையாகி
மன்றல் எல்லாம் மனம்குளிர் மணம்பரப்பும்
மருதநில நிருதபுரி குருபரனே!
பண்பாடும் திருப்புகழ்ப் பைந்தமிழ்ப் பாவலனே!
பண்புற்றோர் நெஞ்சத்தில் படர்மலரே!
வண்ணமயில் அமர்ந்தோனே!வளர்சேவல் கொடியோனே!
வடிவேலால் வளம்காக்கும் வள்ளலே!
செண்பகம் செவ்வந்திச் செம்மாலை மணாளா!
சிறுதேர் உருட்டி அருள்வாய்.
செல்லும்வழி சிவமெனப் போற்றுமூர்ச் செல்வா!
சிறுதேர் உருட்டி அருள்வாய்.
பொருள்
குவளை மலரை வண்டுகள் சுற்றிச்சுற்றி வந்தன;காதல் மலர ,மகரந்தம் பரவ,செய்தியும் பரவியது;
அதிகாலையில் விழித்த தாமரை மலரும் விரிந்தமனத்தில் ஆதவனை விரும்பியது;இதழ்விரிச்
செய்தி எங்கும் பரவியது;
மாலையில் மலர்ந்த அல்லிமலர் நிலவாம் காதலனைக் காண நடுநிசிவரை காத்திருந்த செய்தியும்
கதையாய்ப் பரவிற்று;மனறம் எல்லாம் மனம் குளிர்கின்ற மனம் கமழும் செய்தி கொண்ட மருதநிலத்து
அரசர்களுக்கெல்லாம் அரசனான குருபரனே!
திருப்புகழ் போற்றும் பைந்தமிழ்ப் பாவலனே!பக்தியெனும் பண்பு கொண்டோர் மனதில் வளரும்
மலர்க்கொடியே!மயில் மீது அமர்ந்தவனே!சேவல் கொடி உடையவனே!வடிவேல் தாங்கி
வளம் காக்கும் வள்ளலே!
செண்பகம்,செவ்வந்தி ஆகிய இரு மாலைகளை அணிந்தவனே!சிறுதேர் உருட்டி விளையாடி
அருள்க.எல்லாம் சிவமயம் என வாழும் மக்கள் கொண்ட கன்னியாகுடிச் செல்வா!சிறுதேர் உருட்டி விளையாடி அருள்க.
விளக்கம்
செண்பகம்,செவ்வந்தி ...இரண்டு மலரும் வள்ளி,தேவயானையைக் குறிக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக