கருதிடும் கருத்தில் கலங்கரை விளக்கமே!
கருத்திலார் மனத்தக மருந்தென அமைபவ!
உருகிடும் உளத்தினில் உறைந்திடு இறைவனே!
உவந்துனை உயர்த்திட உருகிடும் உளத்தவ !
கருவினில் கலந்திடாப் பிறவியின் தோன்றலே!
கலங்கிடும் பிறசுரர் போலலாப் புதுமையே!
உருவினில் உலகமே உறைந்திடு பெருமைய !
உனைத்துனை மனச்சிறை அடைப்பவர் காப்பவ!
தருமமே தனியுரு தகவுகள் தளிர்க்கரம்
தகருமே வாகனம்;தகருவர் அரக்கரே.
கருமமே கடன்பணி கலைகளே கதிநடை;
கவலைகள் களைந்திடும் கருணையே!கந்தனே!
செருக்கறு குணத்தவர் செழும்பதித் தனிலுறை
சிவகுக!சிறுதேர் உருட்டி அருளே.
சருகென உடலுடை தவத்தவர் நலப்பதிச்
சிவகுக!சிறுதேர் உருட்டி அருளே.
பொருள்
கருதும் மனத்தகம் எல்லாம் முருகனே,என்பாரின் வாழ்விற்கு வளம் கூட்டும் வழிகாட்டும்
கலங்கரை விளக்கமாகத் திகழ்பவனே!உன்னை எண்ணாது போற்றாது வாழ்வோர் மன இருளைப்
போக்கும் மருந்தாக விளங்குபவனே!உன்னையே நினைந்து உருகும் அன்பரின் உள்ளத்தில்
அமர்பவனே!உன்னைப்போற்றிப் புகழ்வோர் புகழ்ச்சியில் பாட்டில் மனதைப் பறி கொடுப்பவனே!
பத்துத் திங்கள் கருவாகி வெளிவரும் யோனிப் பிறப்பில்லாமல் சுடரில் தோன்றிய
அற்புதமே!கலக்கம் கொண்ட பிற தெய்வங்கள் போல விளங்காமல்,அவர்களுக்கும் வழி
காட்டும் புதுத் தன்மை கொண்டவனே!மூவேழ் உலகங்களும் உள்ளடக்கிய உருவம் கொண்ட மூத்த கடவுளே!உன்னை மனச்சிறையில் பூட்டி வைப்பவருக்கு அருள்பாலிக்கும் ஆண்டவனே!
அறமே உன் உருவம்;நல்ல பண்புகளே உன் கொடைக் கரங்கள்;ஆடு கூட உன் ஊர்தி;உன்னைக் கண்டால் ஆடி அடங்குவர் அரக்கரே;செயலாற்றலே கடமையாகக் கொண்டவன் நீ;உன் நடை
கலைகளாகக் காட்சி அளிக்கும்;உலகோர் கவலைகள் போக்கிடும் கருணையின் மறுபெயர்
கந்தனல்லவா!
கர்வமின்றி நல்ல குணத்தோடு வாழ்பவர் ஊரான கன்னியாகுடியில் கோயில் கொண்டுள்ள
சிவமைந்தன் குகனே!சிறுதேர் உருட்டி அருள்வாய்.
சருகு போல உடலை வாடி,வதைத்து,உண்ணா நோன்பிருந்து,கண் துயிலாது,தவமாற்றும் சான்றோர்
வாழும் கன்னியாகுடியின் சிவமைந்தனே!குகா!சிறுதேர் உருட்டி அருள்வாய்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக