முத்துக்கள் பவளங்கள் மோகனங்கள் முகங்கள்
முறுவலிக்கும் முல்லையிதழ் மங்கையர்கள்
முத்தங்கள் முன்னூறு முற்பிறவி நற்பயனாய்
முருகா வா என்றழைத்துக் கொஞ்சத்
தத்துவத்தின் தனிப்பயனே!தார்மீகத் தவச்சுடரே!
தலையாய குருவான சுவாமிநாதா!
வித்துவத்வ வேதநெறி விரியாகமம் நீ தானென
விரிசடைமுனி வியந்துன்னைப் பாராட்டக்
கத்தும் கடலொலிக் காரரக்கர் கடுஞ்சேனை
காரிருள்போல் களம்வந்து, குரலெழுப்பச்
சத்திய வேலாலே சாய்த்திட்டாய் அரக்கர்குலம்;
சோர்வுநீங்கி ,தேவர்கள் போற்றிநிற்கச்
சித்தத்தில் சிவம்கலந்த சீர்கன்னிச் செவ்வேளே!
சிறுபறை கொட்டி அருள்வாய்.
சித்திரக் கன்னி நகர்ச் செந்தமிழ்ச் செல்வா!
சிறுபறை கொட்டி அருள்வாய்.
பொருள்
முத்து,பவளம் கலந்த அழகு முகங்கள்கொண்ட மங்கையர்கள் முல்லைப்பல் வரிசை தெரிய
முறுவலித்தபடி,முற்பிறவியில் செய்த தவத்தின் பயனாக,உன் முகத்திலே முன்னூறு முத்தங்கள்
இட்டு,முருகா வா வா எனக் கொஞ்ச,
தத்துவமே!தர்மமே!தவச்சுடரே!தந்தைக்கும் குருவான தலைமை பெற்ற தகப்பன் சுவாமியே!
மறைநெறிகளிலும் ஆகமமுறைகளிலும் மிக உயர்ந்த வித்துவான் நீதான்''என முனிவர்
கூட்டம் உன்னைப் புகழ,
கடல்போன்ற அரக்கர் படைகள் களத்தில் நின்று குரல் எழுப்ப,உனது கையிலே உள்ள
சத்தியவேல் அவர்களை அழிக்கவும்,அச்சம் நீங்கிய தேவர்கள் உன்னைப் போற்ற,
எண்ணமெல்லாம் சிவமாய் வாழும் மக்கள் வாழும் கன்னியாகுடிச் செலவமுத்துக்குமரா!
உன் வலிமை வாய்ந்த கைகளால் இப்பறையில் ஒலி எழுப்பி அருள்வாய்.
அழகுமுகுந்த கன்னியாகுடியின் செந்தமிழ்ச்செல்வா!இச்சிறுபறை கொட்டி அருள்வாய்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக