பத்தொன்பதாம் திங்களில் பாட்டுடைத் தலைவனாம் குழந்தையிடம் ''சிறுபறை''போன்ற கருவிகளைக்
கொடுத்து,முழக்குமாறு வேண்டுதல்;அக்குழந்தை மகிழ நாமும் தலைவனின் பெருமைகளை எண்ணி
மகிழ்வதும் இப்பருவ அமைப்பாகும்;இதுவும்,சிறுதேர்ப்பருவமும் ஆண்பால் பிள்ளைத் தமிழுக்கே உரியன.
உருவிலே கோட்டையாகி உலகெல்லாம் உறுதுயருற
உயர்வானில் உறுதிநிலை உற்றபடிச்
செருவிலே தோற்றோடும் செங்கண்மால் நான்முகன்
செயந்தேந்திரன் தேவர்குழாம் கண்டுநகைத்து
வருவீரோ?வளப்போர்க்கு வாய்ச்சொல்லால் வசைபாடி
வதைத்த விறல்திறன் அரக்கராம்
திருவுடைத் திரிபுரத் தெய்வப்பகை கொண்டோரைத்
தேருலகும் சக்கரமாய் மறைகளும்.
திருமாலாம் நாணுடை மேருமலை வில்லுடனே
திருப்போரைத் தொடங்க முற்பட்டுச்
சிரிப்பினால் திரிபுரம் எரித்த வெற்றியும்,
சிலரின் செம்மையிலா ஆணவழிவும்
சிரிப்பினால் சாதித்த சிவபிரான் செல்வா!
சிறுபறை கொட்டி அருள்வாய்!
திரிபுரை மறுவுரு திகழ்கன்னி அருளரசே!
சிறுபறை கொட்டி அருள்வாய்.
பொருள்
மூன்று அரக்கர்கள் வானில் பறக்கும் கோட்டையாகத் தங்களது உருவை மாற்றிக் கொண்டு,
உலக மக்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்தார்கள்;நாடு,நகரம்,மக்கள்,வேள்விச்சாலை போன்ற
இடங்களில் மீது ,பறந்துவரும் கோட்டைகள் அப்படியே அமர்ந்து,அழுத்தி அழிப்பார்.போருக்கு
வந்த திருமால்,நான்முகன்,இந்திரன்,பிறதேவர்கள் எல்லோரும் தோற்றோடினர் .
அவர்களைக் கண்டு நகைத்து ஏளனம் செய்வார்கள் அரக்கர்கள்;திரிபுரம்''எனப் பெயருற்ற
அவர்களின் கொடுமையை அழிக்க,சிவபிரான் போருக்குப் புறப்பட்டார்.
உலகமாகிய தேரில் ஏறி,நான்கு மறைகளாகிய சக்கரங்களைக் கொண்ட உலகமாகிய தேரில்
ஏறி,மேருமலையாகிய வில்லும்,அதில் திருமாலாகிய அம்பும்,கொண்டு போர்க்களம் போனார்.
போர்க்களத்தில் நின்ற எம்பெருமான் அவ்வரக்கர்களை நோக்கி,சிரிக்கத் தொடங்கினார்;
அச்சிரிப்பு அவர்களை அழித்தொழித்தது;அவர்கள் மட்டுமல்ல;தன்னால் தான் அரக்கன் மடிவான் என
நினைத்த அம்பு,வில் போன்றவற்றின் ஆணவமும் அழிந்தது;
சிரிப்பினால் வெற்றிகண்ட சிவபிரானின் செல்வனே!இந்தச் சிறுபறையைக் கொட்டுக.
திரிபுரசுந்தரியின் மறு உருவாய்த் திகழும் அருள்முருகா!இந்தச் சிறுபறையைக் கொட்டுக.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக