காவடி தூக்கும் கரங்கள் காக்கும்
சேவடி சேர்ந் திடின் செம்மையுனை நாடும்;
காவலர் சூழவரும் காலனும் அஞ்சுவான் ;
கார்த்தி கேயன் கூடவே கலையுடன் ஆடிடு!
தூவிடும் தூறலில் துள்ளிடும் தென்னவர்
தூய்மையும் தேக்கிய பக்தியும் தாங்கியே
மூவிரு முகம்கண்டு பொழிகருணை போற்றுவர்;
முன்னவர் மூதற முருகனோ டாடிடு!
நாவிடு நற்சொல்லின் நாயகன் நாடியோர்
நால்வகை நல்லறம் நாடு,புகழ் தானடைவர்;
ஏவிடு தென்றல் இளவேனில் இயைந்தவனே!
ஏத்திடு;இயைந்திடு;ஆடிடு;உயர்ந்திடு.
சேவலும் மயிலும் போற்றும் சிந்தையூர்ச்
செவ்வேள் செல்வனுடன் அம்புலி!ஆடவாவே!
பாவலர் பாடிடும் பண்ணரசி கல்யாணி
பைந்தமிழ்ச் செல்வனுடன் அம்புலி!ஆடவாவே.
பொருள்
முருகனுக்கு,அரோகரா;;எனக் கூவியபடியே உடலெல்லாம் அலகு குத்திக் கொண்டு,
காவடி தூக்கும் அடியவரின் நலம் காப்பவன்,மலரடிகளை நினைந்து போற்றினால் உன்
துயர் தீரும்;காலன் கூட உன்னை நெருங்க அஞ்சுவான்;அப்படிப்பட்ட முருகன் அருகே
சென்று அவனோடு விளையாடுவாயாக.
அருவி த் தூறல் அங்கமெல்லாம் சிலிர்க்க வைக்க,ஆனந்தம் அடைந்த பொதிகை
மலை சார்ந்த தென்பகுதி மக்கள் தூய்மையும்,பக்தியும் கொண்டு,ஆறுமுகனை
நன்றியோடு போற்றி,அவன் கருணையை வாழ்த்துவர்;முன்னோரின் இவ்வறச்செயலை
ஏற்றருளும் முருகனோடு நீயும் ஆட வருவாய்;(வந்தால் உனக்கும் அவன் அருள் கிட்டும்)
நாவால் உரைக்கும் நல்ல சொல்லான முருகா''என்ற சொல்லின் தலைவன் ,அவனை
நாடியோர் ஆறாம்,நாடு,செல்வம்,புகழ் என எல்லாம் பெறுவார்;தென்றல்,இளவேனில்
ஆகிவவைகளோடு இணைந்தவனே!நீயும் போற்று;அருகு செல்;விளையாடு;அதனால் உனக்கு நன்மை எல்லாம் பெருகும்.
சேவற்கொடியோனை மயிலேறியை போற்றும் சிந்தனை மிக்கவர் வாழும் கன்னியாகுடி
வேலேந்திய செல்வனுடன் அம்புலி!விளையாட வருவாய்!
புலவர்கள் போற்றும் பாடலின் தலைவி,கல்யாணி அம்மை மகனுடன் அம்புலி!விளையாட
வருவாய்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக