ஆர்த்தெழும் அலைக்கரம் அடிபணிந்து வரவேற்க
அடிவாரம் தான்தோன்றி அகிலத்தை உருவாக்கும்
ஆதவனின் அருள்நோக்கில் பெற்றிட்ட பேரொளியால்
அமுதகிரணம் பொழிகின்ற குமுதவிரி அம்புலியே!
போர்த்தபனி சார்ந்தமலை காத்தருளும் மூத்தவன்
பூத்தவிழி ஈர்த்தமனத் தீர்த்தத்தலை வார்த்தவன்
பார்த்தசுடர் கார்த்திகேயன் ஈந்தஒளி ஈர்த்துவாழ்
பரந்தசுடர் நிரந்தரன் புரந்துவாழ் அம்புலியே!
கார்கால மாலையும் கவின்வானச் சோலையும்
கூர்குளிரின் குத்தலும்,குவிந்தநிலை அல்லியும்.
ஆரமென அணிந்தவனே!காரணமே கவின்முருகு
ஆதலின் அடிபணிந்து அன்புடனே ஆடிடுவாய்.
நீர்க்கோல நிலக்கோல நெடிதான கன்னியூர்
நிர்மலனாம் முருகனுடன் அம்புலி!ஆடவாவே!
தார்க்கோலத் தங்கநிறத் தளிர்மேனிக் கல்யாணித்
தவமைந்தன் முருகனுடன் அம்புலி!ஆடவாவே.
பொருள் ஆர்க்கும் அலைக் கரத்தால் கடலரசி வரவேற்கக் குணத்திக்கில்
தோன்றும் ஆதவனின் அருள் ஒளிக் கிரணம் அளித்த அருளால் வெண்ணிறமாய்.உலகெல்லாம்
மகிழ்விக்கும் அமுத ஒளி நிலவே!அல்லியை மலர்விக்கும் அம்புலியே!
கைலாய மலையைக் காத்தருளும் முதல்வன்,கங்கையைச் சடையில் தாங்கியவன்,
நெற்றிக்கண் சுடரால் தோன்றிய கார்த்திகேயன் அளித்த ஒளிக் கீற்றே ஆதவன்;நீயோ
ஆதவன் ஒளிக்கீற்றைப் பெற்று விளங்குகிறாய்!
உனது படைகள் கார்காலம்;மாலை நேரம்;வானச்சோலை;குளிரும்,நடுக்கமும்;அல்லிமலர்
என அழகுக் கூட்டமே உன் சிறப்பு;ஆனால் அத்துணை அழகு அமைப்புகளும உருவாக ஆதி காரணன்
ஆறுமுகனே.ஆகவே அவனை நாடி,அடிபணிந்து அவனோடு விளயாடிடுவாய்.
நீரிலும்,நிலத்திலும் உயர்ந்த கன்னியாகுடி முருகனுடன் நிலவே!விளையாட வருவாய்.
அழகிய மலர்மாலை அணிந்தவளும்,பொன்னிற மேனி உடையவளும்,ஆன கல்யாணி அம்மையின்
மைந்தனான முருகனுடன் நிலவே!விளையாட வருவாய்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக