தேனமுது தானுண்ண தேவரோடு கலந்தகாலை
திருட்டுத் தன்மையைக் திருஷ்டியால் உணர்த்தியதால்
தானவர் இராகுகேது தருக்குடன் உன்னையே
தான்விழுங்கிக் கிரஹணமாம் தன்மையுற்ற தளிர்நிலவே!
மானேந்தி மலர்த்தலை மகுடமாம் மணிநிலவே!
மாற்றாக மாதரசி மாணிக்க மாக்குழை
வானேகி வலம்வந்து வளபக்தன் உயிர்காத்த
வரலாறும் அறிந்தநீ வணங்கிடவா அம்புலியே!
ஞானத்தின் ஞாயிறாம் கணபதியின் சாபத்தை
ஞானமற்ற செயலினால் நாணமற்றுப் பெற்றவனே!
சாணத்தில் அருகம்புல் சேர்த்துவைத்து அர்ச்சித்துச்
சதுர்த்தி நாளின் மகத்துவம் சாதித்த சந்திரனே!
ஆனபல துன்பங்கள் அறவேதான் அகன்றிட
அருங்கன்னி ஆண்டவனுடன் ஆடவா!அம்புலியே!
கானமழைக் கவிபோற்றும் கல்யாணி மைந்தன்
கானவள்ளிக் காந்தனுடன் ஆடவா அம்புலியே!
பொருள்
பாற்கடலில் பெற்ற அமுதத்தை அமரர்க்கு அளிக்கும் பொழுது,தேவ உருவில் இராகுவும்.
கேதுவும் கை நீட்டிப் பெற முயன்றனர்;அவர்களைத் தனது கண்ணசைவினால் சூரிய சந்திரர்கள்
காட்டிக் கொடுத்தனர்;தவறிழைத்த இருவரும் தலையும்,உடலும் இழந்தனர்;அதனால்
வெகுண்ட இருவரும் சூரியனையும்,சந்திரனையும் தான் பெற்ற பாம்பு வடிவத்திலும் காலம்
கூடும் பொழுது விழுங்கி விடுவர்;கிரஹணம் என்னும் தன்மை பெற்ற நிலவே!
சிவனின் சடை அமர்ந்த பிறை நிலவே!உனக்கு மாற்றாக அமாவாசை நாளன்று அபிராமி
பட்டரின் உயிரைக் காக்க அபிராமி அம்மை,தனது காதுத் தோட்டை நிலவாக ஒளிரும்படி
வானில் விட்ட வரலாற்றை நீ அறியவில்லையா!அம்புலியே!
விநாயகனின் கொழுத்த வயிற்றை ஏளனம் செய்து அதனால் சாபம் பெற்று,அது நீங்க
சதுர்த்தி நாளன்று சாணத்தில் உருவாக்கிய கணபதிக்கு,பூஜை செய்து அருகம்புல்லால்
அருச்சனை செய்து சாபம் நீங்கப் பெற்றாய்;சதுர்த்தி நாளும் உன்னால் உயர்வு பெற்றது;
இப்படிப்பட்ட துன்பங்கள்,அறவே நீங்க வேண்டின் கன்னியாகுடியில் கோயில்
கொண்டுள்ள முருகனோடு விளையாட வருவாய்.
கவிஞர்கள் போற்றும் கல்யாணி அம்மையின் மைந்தன்,குறவள்ளிக் கணவன் முருகனுடன்
அம்புலியே!விளையாட வருவாய்.
விளக்கம்
திருஷ்டி ==பார்வை
கிரஹணம் ==பிடித்தல்.பீடித்தலுமாம்
வளபக்தன்===அபிராமி பட்டர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக