அருமுனிக்கு முழுமுதல் உபதேசம்
அழகுகாட்சி அளித்ததுன் திருப்பாதம்
குருபரன் செந்நாவில் வேலெழுதிக்
குருவாகிக் கவிதந்த காலடிகள்
அருணகிரி அஞ்ஞா னம் அகற்றியே
அருணன்போல் அளித்ததீக்கை திருவடியே.
வருணமீன் வராசர வழித்தோன்றல்
வாழ்வுயர வரமளித்த வளக்கால்கள்
தருக்கனுக்கும் தானேறும் ஊர்தியாய்
தவழ்கொடியாய்த் தன்கருணை தருவரக்கால்;
இருப்புசங்கிலி இடும்பனுக்கும் இரங்கிமனம்
இருதோளில் ஏற்றகாவடி வழங்குசேவடி ;
விருப்புற்றோர் விழைவுற்றோர் வாழ்கன்னிச்
செல்வா!சிற்றில் சிதையேலே!
தெருவெல்லாம் தமிழ்முழங்கும் கன்யாகுடிச்
செல்வா!சிற்றில் சிதையேலே.
பொருள்
அகத்திய முனிவனுக்கு பிரணவ உபதேசம் செய்து காட்சி அளித்து ஆட்கொண்டதும்,ஊமையாம்
குமரகுருபரன் நாவில் வேலால் பிரணவத்தை எழுதி,கவிபாடும் திறன் தந்தது,
அருணகிரியின் அறியாமை போக்கித் திருவடி தீக்ஷை அளித்து ஆட்கொண்டது,
பராசர முனிவரின் புதல்வர்கள் நீரிலே மீன்களாய்த் தவித்த நிலையை மாற்றி வரமளித்தது
கர்வம்கொண்ட சூரபன்மனுக்கும் கருணையுடன் அவன் தவறுகளை மன்னித்து,ஊர்தி
மயிலாய்ச் சேவற் கொடியாய் ஏற்றது,
இரும்பு சங்கிலியோடு திரிந்த அரக்கனாம் இடும்பனுக்கும் இடமளித்துக்,காவடி சுமக்கும்
பணி நல்கியது,ஆகிய நலங்களைத் தங்களை நாடியோருக்குத் தங்கள் அளித்த வரமல்லவா!
அப்படிப்பட்ட புனிதமான சேவடி கொண்டமுருகா!உன்னை விரும்பிப்போற்றும் எங்கள்
மனம் வருந்துமாறு எங்களது சிறிய இல்லத்தை உன் திருப்பாதங்களால் அழித்து விடாதே.
தெருவெல்லாம் தமிழ்ப் பண்கள் ஒலிக்கும் கன்னியாகுடி செந்தமிழ் முருகா!எங்களது சிறிய
இல்லத்தைச் சிதைத்து விடாதே.
விளக்கம்
அருமுனி==அகத்தியர்
வருணமீன் ==தண்ணீரில் வாழும் மீன்கள் இது சாபம் பெற்ற பராசர முனிமகன்களைக் குறிக்கும்
தருக்கன் ==சூரபன்மன்
தருவரக்கால் ===தருவரம் ..வினைத்தொகை வரக்கால் ---வரத்தை நல்கும் கால்
வராசர --பராசர''என்பது எதுகை மோனை நோக்கி வராசர் என ஆயிற்று

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக