அஞ்சியஞ்சி அகிலமும் சுற்றிவரும் அம்புலியே!
அஞ்செழுத்தான் அழித்திட்ட அரக்கனுடன் அழித்திடவே
அஞ்சும் அதிவீர பத்திரனாய்த் தேடுகின்றான்;
அஞ்சாமல் ஒளிர்ந்திட ஆறுமுகனை அண்டிடுவாய்!
வஞ்சிமட்டும் வாழ்வதோ!வந்திட்டோம் நாங்களுமே;
வஞ்சமனக் காமத்தின் வக்கிரமாய் விண்மீன்கள்
உஞ்சவிருத்தி அந்தணர்போல் ஒண்டிடவே தேடுகின்றார்;
உந்துமனம் தானடக்கி உறுவேலன் தாளடைக.
மஞ்சையெனும் மகளிருக்குள் மனவேறு பாட்டறிந்து
மஞ்சளுடல் மாற்றிடவே மாவரக்கன் தேடுகின்றான்
மஞ்சையவள் மனக்காதல் மன்னுயிரும் காத்துநிற்க
மஞ்சைமீது பவனிவரும் மாமுருகன் சார்ந்திடுக.
கஞ்சமலர் அல்லிகுவளை கயல்மீன்கள் பொய்கைசூழ்
கஞ்சமனம் கொள்ளாதூர் கந்தனுடன் ஆடவா!
நஞ்சுண்டு நாடுகாத்த நீலகண்டன் நிலைத்துவாழ்
நற்கன்னி நாதனுடன் நன்னிலவே!ஆடவா.
பொருள்
அரக்கன் தக்கன் ஆற்றிய அவமதிப்பு வேள்வியை அழித்தும்.தக்கன் தலையைக் கிள்ளியும்,அவனது
வேள்வியில் கலந்து கொண்ட தேவர்களை எல்லாம் அழிக்கவும் முனைந்த வீரபத்திரரிடம்
இருந்து தப்பிக்கப் பலரும் ஓடினர்;அம்புலியே!நீயும் ஒடி ஒடி உலகைச் சுற்றி வருகிறாய்;
உன் அச்சம் நீங்கி நிலையுடன் வாழ ஆறுமுகன் தாளினை நாடு நீ காக்கப் படுவாய்.
உரோகிணி மட்டும் உன்னோடு காதல் புரிவதா?நாங்களும் உன் மனைவியர் தானே!விடமாட்டோம்
உன்னை;என விடாது சுற்றும் அசுவினி முதலிய விண் மீன்களிடம் இருந்து தப்பிக்க
உன்மனட்தை அடக்கி,ஆறுமுகனை நாடு;
தனது இருபத்தேழு மகள்களையும் மணம் புரிந்து கொண்டு உரோகிணியோடு மட்டும்
வாழும் மருமகன் சந்திரனைத் தண்டிக்க அரக்கன் தக்கன் துரத்துகிறானா?கவலற்க;
காதலியோடு வாழவும்,உன்னுயிரைக் காத்துக் கொள்ளவும் மயில் மீது அமர்ந்திருக்கும்
முருகனின் சேவடிகளை நாடிடு ;இடர் விலகிடும்.
தாமரை,அல்லி குவளை ,மீன்கள் சூழ்ந்த பொய்கைகள் நிறைந்து விளங்கும் ஊர்;
வாரிவழங்கும் வள்ளன்மை மனம் கொண்டோர் ஊரான கன்னியாகுடிக் கந்தனுடன்
விளையாட ஒடி வா அம்புலியே!
நஞ்சினைத் தானுண்டு தேவர்களையும் உலகையும் காத்த நீலகண்டன் விரும்பித்
தங்கியுள்ள கன்னியாகுடியின் நாதனாம் கந்தனுடன் அம்புலியே!விளையாட ஒடி வருவாய்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக