அஞ்சொலிள மஞ்ஞையாம் அன்னமாம் மின்னும்
அகல்விளக்காம் அதிரூப யௌவனமாம் மயங்கும்
அகல்விழியாம் அருங்குயில் இசைப்பேச்சாம் காக்கும்
அணிகரமாம் குறவள்ளி கவர்ந்த அழகோனே!
மஞ்சள்கனி மலர்கட்டி மாவிலையும் தோரணமும்
மனையெல்லாம் கமுகுவாழை மணப்பந்தல்
மணமுரசு வானதிர மங்கள மதிநாளில்
மகபதி மகள்மனம் குடியமர் மகிழோனே!
தஞ்சமெனத் தாள்பணியும் தவத்தோரும் அடியாரும்
தந்துயரை எடுத்துரைத்துத் தகவினை வேண்டுங்கால்
அஞ்சலென அபயக்கரம் காட்டியருள் பாலித்து
அச்சமெலாம் அகற்றிடும் அன்புள்ளம் கொண்டோனே!
கஞ்சமலர்த் தடாகத்தில் கருங்குவளை கண்காட்டும்
கன்னி நகர்க் கந்தவேளே!வருகவே!வருகவே.
பஞ்சினும் மெல்லடியாள் பரம்பொருளின் பாகத்தாள்
பழங்கன்னி மைந்தனே!வருகவே!வருகவே.
பொருள்
இளமையில் தோகைக் குழலி;அன்ன நடையாள் ;அகல் விளக்குபோல் மங்களத்தாள்;இளமை
ததும்பும் அழகுடையாள்;பேசினால் குயில்;தினைப்புனம் காக்கும் கரத்தாள்;மலைநாட்டு மங்கை
வள்ளியிடம் மனதைப் பறிகொடுத்த அழகனே!
மஞ்சள்,கனிகள்,மலர்கள்,மாவிலை,தோரணம்,கமுகு,வாழை மனை முழுதும் கட்டப்பட்ட
மணவீடு;மணப்பந்தல்;மணமுரசு ஒலிக்க நல்ல நாளிலே இந்திரன் மகளாம் தெய்வயானையை
மணந்து,அவள் மனத்தில் குடி கொண்டவனே!
தஞ்சம் எனத் தன்னை நாடிவரும் அடியவர்களுக்கு,அஞ்சேல்!என அபயம் அளித்து,அவர்தம்
துயர் போக்கும் அன்புள்ளம் கொண்டவனே!
தாமரையும்,குவளையும் மலர்ந்த தடாகங்கள் நிறைந்த கன்னியாகுடிக்கந்தவேளே!
வருக;வருகவே.
மென்மையான பாதங்களைக் கொண்டவளும்,ஈசனின் சரி பாதியாய் விளங்குபவளும் ஆகிய
கல்யாணி அம்மை மைந்தனே!வருக;வருகவே.
விளக்கம்
கஞ்சமலர்த்தடாகத்தில் கண்குவளை கண்காட்டும் ......சிவசக்தி இணைந்த தன்மை ;தாமரை
சிவனையும்,குவளை சக்தியையும் விளக்குகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக