ஆணவப் பிரமன் அடைந்த வெஞ்சிறை
ஆக்கத் தொழிலை ஆக்கக் கடவுள்
ஆக்குவோம் என்றே ஆற்றிய படைப்பில்
ஆயிரம் யுகத்தின் அற்புதம் அளித்தவனே!
ஆணவச் சூரனின் ஆணவம் அழிக்க
ஆன்றோர் துயரினை அறவே அழிக்க
வீணவா வரமும் வெம்பி அழிய
வீரத்தால் வெற்றி கண்ட வேலவா!
ஆணவம் கன்மம் மாயை அகற்றி
ஆன்ற பணியுடை அருந்தவ முனிவர்
ஆசா பாச அறநெறி மக்கள்
ஆருயிர்கள் அனைத்தும் காக்கும் ஆறுமுகா!
ஆணவம் அழித்து ஆன்மம் படைத்து,
ஆந்த்ரமாய்க் காக்கும் கன்னியான் வருகவே!
ஆடவல்லான் ஆட்கொள்ளும் ஆடலரசி கல்யாணி
ஆனந்த அருமைந்த!வருகவே!வருகவே.
பொருள்
பிரணவப் பொருள் அறியாத பிரமனைச் சிறையில் அடைத்தார் முருகன் பிரமன் ஆற்றிய
படைப்புத் தொழிலைத் தானே ஏற்றுக் கொண்டார்;ஆயிரம் யுகங்கள் காணாத அற்புதப்
படைப்புகள் ஆறுமுகப் படைப்பில் உருவாயின.படைப்புத் தொழில் ஆற்றிய முருகா!
ஆணவம் கொண்ட சூரனை அழிக்கவும்,அவனால் துன்புற்ற சான்றோரின் துயரத்தை
அழிக்கவும்,சூரன் பெற்ற கர்வமிக்க வரபலம் குறைந்து அவன் துயருறவும்,வீரம் விளைத்து
வெற்றி கண்ட வேலனே!
மும்மலம் அகற்றி,செயலினால் தவத்தால் உயர்ந்த முனிவர்கள்,பிறப்பு,இறப்பு,ஆசை,பற்று
என உழலும் மக்கள் ,கோடிக்கணக்கான உயிர்கள் ஆகிய அனைத்தையும் காக்கும்
கடவுளே!ஆறுமுகா!
ஆணவம் அழித்தாய்;ஆன்மாக்களைப் படைத்தாய்;அனைத்தையும் முழு மனத்துடன்
காத்தாய்;கன்னியாகுடி முருகா!வருகவே.
ஆடவல்லானை ஆட்கொண்ட ஆடலரசியான கல்யாணி அம்மையின் ஆனந்தமயமான
அருமை மைந்தனே!வருகவே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக